புதிதாய் கிடைத்த சுதந்திரமும், தனிமையும் எந்த ஒரு மனிதனையும், ( நமது கதையில் நிழலையும் ) ஏதாவது ஒரு பிடிமானத்திற்கு ஏங்கத்தான் செய்து விடுகிறது. அப்படி நம் நிழலின் பிடிமானம் தான் அவனுக்கு பரிச்சயமான ஒரே முகமான நம் சாகரிகா, அதை காதல் என தவறாய் புரிந்துக்கொண்டு அவளை தேடி கண்டு கொள்கிறது நம் நிழல்.
நமது நிழலின் பதிவு, பலரின் பச்சாதாபத்தைத் தேடித் தருகிறது. கடமைக்கே என சிலர் தங்கள் கருத்துகளை பதிவு செய்கின்றனர்.
தன்னுடைய பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தால் போதும் என இருக்கும் நம் சாகரிகா, நிழலின் வருகையில் பெரிய நாட்டம் காட்டாமல் நடந்து கொள்கிறாள், அனால் ஷில்பாவின் சொல் கேட்டு நிழலிடம் முன்னொரு முறை வந்த பொது நடந்து கொண்ட விதத்திற்கு மன்னிப்புக்கோரி நிழலை அங்கேயே அன்றிரவு தங்கிக்கொள்ள சொல்கிறாள்.
இப்படியாக இந்த அத்தியாயம் முடிகிறது.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!