கண்ணெதிரே தெரிகின்ற அனைத்து அசாத்தியங்களையும் மீறி அதீத தன்னம்பிக்கையுடன் தன் மனைவியை சமாதானப்படுத்த கோவிந்தசாமி எடுக்கின்ற பிரயத்தனங்களை வாசித்தால் எரிச்சல் தான் வருகிறது. எதற்கு இத்தனை பரிதவிப்பு? சில மனிதர்களின் அசட்டுப் பிடிவாதங்களை நீல நகரத்தின் சுதந்திரம் கூட மாற்ற முடியாது போலும். ( சரி, இருக்கட்டும். கதை நகர வேண்டுமே?).
ஆனால் அவனுக்கு முகக்கொட்டகையில் கிடைக்கின்ற தெரிவுகள் பூமியில் இருக்கும் மனிதர்களுக்கு மட்டும் கிடைத்து விட்டால் எத்தனை ஒழுங்கு பிரச்சினைகள் வரும் மானிடத் தன்மையே அற்றும் போய்விடக்கூடும். ஆனால் இதுதான் நீல நகரம் ஆயிற்றே இங்கு எது வேண்டுமானாலும் தன் இஷ்டப்படி நடக்கலாமே?.
தொண்ணூறுகளில் பிறந்து எழுபதுகளில் இறந்த இலக்கியவாதி யார் என்று முதலில் புரியவில்லை. அது எப்படி சாத்தியம் என்று தான் தோன்றிற்று. ஆனால் அதற்குள் இருக்கும் குறியீடு இரண்டாம் வாசிப்பில் தான் புரிந்தது
.

ஆங்காங்கு சிற்சில சுவையான வசனங்கள். அழகையும் எழுத்தையும் இணைத்துச் சொல்லப்படும் நீலநகரத்தின் பழக்கம், ஒரு சராசரி மனிதனின் பிரபலங்கள் சார்ந்த அறிவு, புவியியலோடு தொடர்பு படுத்தப்படுவதில் இருக்கின்ற நுணுக்கமான அரசியல் என்பவை அவற்றுக்கு சில உதாரணங்கள்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.