நாளை மாலை 6 மணிக்கு கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழவிருக்கும் ‘பொன் மாலைப் பொழுது’ நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன்.
‘எண்ணும் எழுத்து’ என்பது பொதுவான தலைப்பு. எனக்கு சொற்பொழிவாற்ற எப்போதும் விருப்பம் இருப்பதில்லை. சும்மா சிறிது நேரம் அறிமுக வார்த்தைகளாக ஐந்து நிமிடம் பேசிவிட்டு நிகழ்ச்சியைக் கலந்துரையாடலாக மாற்றிவிடலாம் என்று எண்ணியிருக்கிறேன்.
நான் 90களில் எழுத வந்த தலைமுறையைச் சேர்ந்தவன். நாவல்கள், சிறுகதைகள், அரசியல் நூல்கள் என்று சுமார் 60 புத்தகங்கள் இதுவரை வெளியாகியிருக்கின்றன. ஆனால் அவற்றை மையப்படுத்தி இதுவரை இப்படி ஒரு நிகழ்ச்சி ஏற்பாடானதில்லை. இதற்கெல்லாம் யார் வருவார்கள் என்பது குறித்தும் ஒன்றும் தெரியவில்லை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் வாருங்கள். உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக் களிப்போம். ‘அன்பின்பாரா’ வினாக்களை அங்கே நேரில் கேட்க ஒரு வாய்ப்பு.