டிசம்பர் 16, 17 தேதிகளில் கோயமுத்தூரில் நடைபெற்ற விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்துகொண்டு திரும்பினேன். தமிழின் முக்கியமான படைப்பு ஆளுமைகளுள் ஒருவரான யுவன் சந்திரசேகருக்கு இவ்வாண்டு விருது வழங்கப்பட்டது. இந்திய வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, மலேசிய எழுத்தாளர் ஜாஹிர், எம். கோபாலகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோர் யுவனை வாழ்த்திப் பேசினார்கள். விழாவில் யுவனைக் குறித்த ஆவணப் படம் ஒன்று திரையிடப்பட்டது...
விஷ்ணுபுரம் விழா – அழைப்பிதழ்
இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. விழா, வரும் டிசம்பர் 16-17 தேதிகளில் கோவையில் நடக்கிறது. நிகழ்ச்சியில் வரலாற்றறிஞர் ராமச்சந்திர குஹா, மலேசிய எழுத்தாளர் சையத் மொஹம்மத் ஷாகிர், எம். கோபாலகிருஷ்ணன், பாலாஜி பிருத்விராஜ் இவர்களுடன் ஜெயமோகனும் யுவனை வாழ்த்திப் பேச இருக்கிறார். ஆண்டுதோறும் இவ்விழாவில் நடைபெறும் எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு நிகழ்ச்சிகள்...
எண்ணும் எழுத்து – ஒரு நிகழ்ச்சி
நாளை மாலை 6 மணிக்கு கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழவிருக்கும் ‘பொன் மாலைப் பொழுது’ நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். ‘எண்ணும் எழுத்து’ என்பது பொதுவான தலைப்பு. எனக்கு சொற்பொழிவாற்ற எப்போதும் விருப்பம் இருப்பதில்லை. சும்மா சிறிது நேரம் அறிமுக வார்த்தைகளாக ஐந்து நிமிடம் பேசிவிட்டு நிகழ்ச்சியைக் கலந்துரையாடலாக மாற்றிவிடலாம் என்று எண்ணியிருக்கிறேன். நான் 90களில்...
மயிலைத் திருவிழா படங்கள்
மயிலாப்பூர் ஃபெஸ்டிவல் நேற்று முதல் நடக்கிறது. நேற்று சில படங்கள் எடுத்தேன். சுமாராக வந்தவற்றுள் சில இங்கே.
ஞான் அவிடெ…
ஐ.எஸ்.ஆர்.ஓ. நம்பி நாராயணன் விவகாரம் உச்சத்தில் இருந்தபோது சென்றதுதான் கடைசி. பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் திருவனந்தபுரத்துக்குத் திரும்பச் செல்கிறேன். அதே குறைந்தபட்ச டிராஃபிக். அதே அழகான சூழ்நிலை. அதைவிட அழகான பெண்கள். செடிகள் காற்றில் அசைந்தாடுவதுபோல் அனைத்துப் பெண்களின் கூந்தலும் காற்றில் அலைபாய்கிறது. யாரும் பின்னல் போடுவதில்லை. இன்னும் உண்டு ரசிப்பதற்கு. ஆட்டோவில் குறைந்தபட்சக்...