விழா

விஷ்ணுபுரம் விழா – அழைப்பிதழ்

இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. விழா, வரும் டிசம்பர் 16-17 தேதிகளில் கோவையில் நடக்கிறது.

நிகழ்ச்சியில் வரலாற்றறிஞர் ராமச்சந்திர குஹா, மலேசிய எழுத்தாளர் சையத் மொஹம்மத் ஷாகிர், எம். கோபாலகிருஷ்ணன், பாலாஜி பிருத்விராஜ் இவர்களுடன் ஜெயமோகனும் யுவனை வாழ்த்திப் பேச இருக்கிறார்.

ஆண்டுதோறும் இவ்விழாவில் நடைபெறும் எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு நிகழ்ச்சிகள் இம்முறையும் நடக்கின்றன. இதில் கலந்துகொள்ள என்னையும் அழைத்திருக்கிறார்கள். என்னோடு சந்திரா, கனலி விக்னேஸ்வரன், வாசு முருகவேல், தீபு ஹரி, அரவின் குமார், இல. சுபத்ரா, லதா அருணாசலம் ஆகியோரும் இவ்வாசகர் சந்திப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இச்சந்திப்புகள் 16ம் தேதி காலை முதல் நிகழும். விருது வழங்கும் நிகழ்ச்சி 17ம் தேதி மாலை நடக்கும்.

விழாவைக் குறித்த முழுமையான விவரங்கள், கலந்துகொள்ள வருவோருக்கான தங்குமிடம் பதிவு செய்வது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஜெயமோகனின் தளத்தில் காணலாம்.

வாசக நண்பர்கள் அனைவரையும் இந்த விழாவுக்கு அன்புடன் அழைக்கிறேன். யுவன், நமது தலைமுறையின் சிறந்த கலைஞர்களுள் ஒருவர். அவரைக் கொண்டாடக் கிடைக்கும் சந்தர்ப்பத்தைத் தவறவிட வேண்டாம்.

ஜெயமோகன் இணையத்தளம்

தங்குமிடம் குறித்த தகவல்களை இங்கே பெறலாம்.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி