ஒவ்வொரு அத்தியாயத்திலும் மூச்சுக் காற்றை உள்ளிழுக்கவும் மறந்து, சுய பிரக்ஞையற்று வாசிக்கும் அளவிற்கா சங்கதிகளை கோர்ப்பது?
நீல நகரவாசியாகவே மாறிவிட்ட சாகரிகாவும், கோவிந்தசாமியின் நிழலும் பேசிக்கொள்கையில், அவன் மீது தனக்கு விருப்பமில்லை என அவள் வெளிப்படையாய் அத்தனை உறுதியாய் கூறும் மனோதிடம் இன்னும் நம்மைச் சுற்றி வாழும் நம் மகளிருக்கு முழுதாய் வாய்க்காத ஒரு கொடை.
நீல நகர வாசிகளின் செயலும், அவர்களின் தகவல் தொடர்பும் அபாரம். ரகசியமென்று எதுவும் இல்லாத ஒரு நகரம். ரகசியமே இல்லாவிட்டால் வாழ்வில் சுவாரசியமே இருக்காதே என்று கோவிந்த் கேட்கும் வினா நியாயமானதே. ஆயினும் அங்கே அவர்கள் அப்படித் தான்.
நீல நகரத்தின் பிரஜையாவது மிக மிக எளிது. ஆனால், அவ்வழிமுறையை கேட்டீர்களாயின் உங்களுக்கு தலை கிறுகிறுக்கலாம்.
சூனியன் இப்போது அந்நகரத்துவாசிகளில் ஒருவனாகி விட்டான். கோவிந்தசாமியின் நிழல் அவனுக்காக அங்கே காத்திருக்கிறது.
அடுத்து…..???
இந்த அத்தியாயத்தில் ஒரு வார்த்தையை முதல் முறை புதிதாய் கண்டிருக்கிறேன். “வாழ்வறை”. இதன் சரியான அர்த்தம் என்னவாய் இருக்கும்???