வழக்கம் போல சூனியன் தன் புகழை நீட்டி முழங்குவதில் அத்தியாயம் நகர்கிறது. இதுவரையிலும் வெண்பலகையில் போரிட்டுக் கொண்டிருந்தவர்கள் நேரடியாக சந்தித்துக் கொண்டு களமாடினால் அது இன்னொரு சுவராசியம் என நினைத்தால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. கோவிந்தசாமியின் செயல்பாடுகள் குறித்து தன் கதாபாத்திரம் வழி அறியும் சூனியன் குழம்பிப் போகிறான். அவனின் படைப்புகள் தன்னிச்சையாக இயங்க ஆரம்பிக்கின்றன. தான் திட்டமிட்ட படி எதுவும் நடக்காததால் கோபத்தின் உச்சத்துக்கு செல்கிறான்.
சித்தாந்தங்களின் அடையாளத்தில் தன் படைப்புகள் பிரசவித்திருந்ததால் குழப்பம் விளைவிப்பவர்களை ஒழித்துக் கட்ட எல்லா சித்தாந்தவாதிகளும் கட்சிக்குள் குழப்பம் விளைப்போரை போட்டுத் தள்ள சொல்லும் யோசனையை சூனியனும் ஏற்கிறான். பூகம்பச்சங்கைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறான். அழிவுக்கான ஆயுதங்களாக அவனுடைய கதாபத்திரங்கள் இல்லாத்து ஏமாற்றம் என்ற போதும் பூகம்பச்சங்கு எதற்கு? என்ற விடை கிடைத்திருக்கிறது.
சூனியன் எங்கு, எப்போது, எப்படி காவு வாங்கப் போகிறான்? அவனுடைய கணக்கில் கோவிந்தசாமியோடு வேறு யாரெல்லாம் இருப்பார்கள்? என்பதை அறிய கடைசி அத்தியாயத்திற்காக காத்திருப்போம்