எனது குறுவரிக் குப்பத்தில் கொட்டுகிற ரத்தினக் குப்பைகளை உடனுக்குடன் வாசித்து மகிழ்வதில் உள்ள நடைமுறைப் பிரச்னைகள் குறித்து வாசகர்கள் அவ்வப்போது வருத்தம் தெரிவித்து வந்தார்கள்.
தளத்துக்கு நேரில் வந்து வாசிப்பது சிரமம், இங்கே எழுதுவது நேரடியாக ட்விட்டருக்கு வந்து விழும்படிச் செய்யமுடியுமா என்று கேட்டார்கள். இதென்ன போங்காட்டம்? ட்விட்டருக்கு மட்டும் போகலாம், இங்கே வரமுடியாதா?
அதான் ஆர்.எஸ்.எஸ். ஃபீட் இருக்கிறதே என்றால், அது முடியாதாம். ஃபீட் ரீடர் அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகி வருகிறது போலிருக்கிறது.
இப்பிரச்னைக்கு நல்லதொரு தீர்வாக சிலேட்டுத் தளத்தில் மின்னஞ்சல் மூலம் குறுவரிகளை உடனுக்குடன் பெறுவதற்கு ஒரு வசதி செய்திருக்கிறேன். முதலில் ஃபீட் பர்னர் சப்ஸ்கிருப்ஷனுக்கு வழி செய்தேன். அதனைக் காட்டிலும் ஜெட்பேக் சிறந்தது என்று சிலர் சொன்னார்கள்.
நான் என்னத்தைக் கண்டேன்? போடு ஒரு ஜெட்பேக்.
இனி சிலேட்டில் எழுதுபவற்றை நீங்கள் நேரடியாக மின்னஞ்சலில் பெறலாம். அதுவும் உடனுக்குடன்.
போதுமல்லவா?
இருந்தாலும் ஜாக் டோர்சியுடன் அப்படி என்ன முன்விரோதம், அப்படியே ட்விட்டருக்கும் ஒரு பார்சல் அனுப்பக்கூடாதாக்கும்?
No Sir, RSS is not out dated. It is still active and we love it. We are using it.
Please do not remove.
ஆர்.எஸ்.எஸ்ஸை வெறுப்பேனா? அதுவும் இருக்கிறது. மின்னஞ்சல் மூலம் படிக்கும் வசதியைக் கூடுதலாகச் சேர்த்திருக்கிறேன். அவ்வளவே.
ஈமெயில் எல்லாம் வோணாம் சார். வொன்லி புறா நீடெட் 🙂 உங்களுக்கு யாரோ தப்புத்தப்பா சொல்லித் தர்றாங்க 🙂
நன்றி சார்