பத்ரி நலமாக இருக்கிறார்!

பத்ரி சேஷாத்ரி

இன்று காலை ஹிந்து நாளிதழின் நீத்தார் குறிப்பு விளம்பரப் பகுதியைப் பார்த்த பலபேர், அதிர்ச்சியடைந்து பத்ரிக்குத் தொலைபேசிய வண்ணம் உள்ளார்கள்.

‘ஓ, நீங்கள் இன்னும் உயிருடன் தான் இருக்கிறீர்களா?’ என்று ஜோக்கடிப்போர் முதல், தமது அதிர்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையில்லாமல் தவித்துத் திண்டாடுவோர் வரை அவர்களுள் பலவிதம்.

ஹிந்துவில் ‘காலமானார்’ என்று இன்று குறிப்பிடப்பட்டிருக்கும் பத்ரி சேஷாத்ரி வேறு யாரோ. வலையுலகில் தாட்டு தாட்டென்று தாட்டிக்கொண்டிருப்பவரும், கிழக்கு ஆபீசில் எனக்குப் பக்கத்து ரூம்வாசியுமான என் நண்பரல்லர் என்பதை இதன்மூலம் நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பத்ரி நலமாக உள்ளார். அவர், இன்று ஹிந்துவில் காலமான வேறொரு பத்ரி சேஷாத்ரிக்குத் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறார்.

Share

6 comments

By Para

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me