பதிலளிக்கும் நேரம்

கிழக்கிலிருந்து விலகிய பிறகு நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று கேட்டு அநேகமாக தினசரி இரண்டு மின்னஞ்சல்களாவது வருகின்றன. இணையத்தில் ஏன் முன்போல் எழுதுவதில்லை என்று விசாரித்தும்.

இது பதிலளிக்கும் நேரம்.

உண்மையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மூச்சு விடவும் அவகாசமின்றி வேலைகள் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தன. சன் டிவியில் இரண்டு புதிய மெகா சீரியல்களுக்கு ஒரே சமயத்தில் வசனம் எழுதும் வாய்ப்பு வந்தது.

நீண்ட நாள்களாகப் பேச்சுவார்த்தையில் மட்டும் இருந்த ஒரு திரைப்படத்துக்கான பணிகள் திடீரென சூடு பிடித்து அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. அப்படத்தின் கதை என்னுடையது. திரைக்கதை, வசனங்களையும் நானே எழுதுகிறேன். முதல் முறையாக, ஒரு பெரிய பட்ஜெட் படத்துக்கு – பெரிய நடிகர் நடிக்கும் படத்துக்குப் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு. (விவரங்கள் விரைவில்)

இதோடு, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தலைமை நிர்வாகி பால கைலாசம், என் முதல் ஆசிரியரும் இப்போது பு.த. டிவியில் தயாரிப்பாளராக உள்ளவருமான ரகுநாத் மூலம் அழைப்பு விடுத்து, கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு நிகழ்ச்சிக்கு ஸ்கிரிப்ட் செய்து தரச் சொல்லிக் கேட்டார்.

காட்சி ஊடகச் செயல்பாடுகள் புதிதில்லைதான். ஆனால் முழுநேரம் செய்ததில்லை இதுவரை. இப்போது, வேறு எந்த ஒரு முழு நேரப் பணியையும் சிந்திக்கக்கூட முடியாத அளவுக்கு எழுத்து மட்டுமே வாழ்வை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

இது எனக்குப் பிடித்திருக்கிறது. ஒரு வகையில், நான் விரும்பியதும்கூட.

புதிய தலைமுறை டிவி தொடர் மட்டும் உடனே ஆரம்பித்துவிட்டது. ஏற்கெனவே குமுதம் ரிப்போர்ட்டரில் உணவின் வரலாறு எழுதியபடியால், இந்நிகழ்ச்சிக்கு ஸ்கிரிப்ட் செய்வது சற்று சுலபமாகவே இருந்தது. ஆனால் பத்திரிகைக்கு எழுதுவதற்கும், விஷுவலுக்கு இடமளித்து எழுதுவதற்குமான வித்தியாசங்கள் பெரிது. இந்தத் தொடர், மிகப்பெரிய வெற்றி கண்டிருக்கிறது இப்போது. செய்தி சானல் ரேட்டிங் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது என்று சொன்னார்கள். மகிழ்ச்சியாக இருந்தது. இதன் தயாரிப்பாளர் – இயக்குநர் விக்ரம், தொகுத்து வழங்கும் ஹரி, இரண்டு பேரும் எனக்கு அளிக்கும் உற்சாகம் மிகப் பெரிது. ஹரி, ஏற்கெனவே குமுதத்தில் என்னுடன் பணியாற்றியவர். என் ரசனைகள், ஆர்வங்கள், நான் வேலை செய்யும் விதம் அனைத்தும் அறிந்தவர். இவர்களோடு இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் தம்பி வெட்டோத்தி சுந்தரம் திரைப்படத்துக்கு எழுதத் தொடங்கிய பிறகு, தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுதுவது நின்றுபோயிருந்தது. கிழக்கு வேலைகள் அதிகரித்து, அந்தப் பக்கம் திரும்பக் கூட முடியாத நிலை. இப்போது கிழக்கிலிருந்து வெளியேறியவுடன் (சரியாகச் சொல்வதென்றால், விலகியதற்கு மறுநாள்!) இயக்குநர் விக்கிரமாதித்தனிடமிருந்து அழைப்பு வந்தது. மெகா சீரியல் உலகுக்கு என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் அவர். கெட்டி மேளத்துக்குப் பிறகு அவருக்கு நான் எழுத முடியாமலேயே இருந்தது. இடையில் மலர்கள், மேகலா, செல்லமே என்று மூன்று தொடர்களை அவர் கடந்திருந்தார். அடுத்ததாக அவர் தொடங்கவிருக்கும் ‘உதிரிப்பூக்களு’க்கு வசனம் எழுதச் சொன்னார். அது ஹோம் மீடியா தயாரிப்பு என்றும்.

ஹோம் மீடியாவுக்கு நான் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். சிவசக்தி. இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு திரும்பவும் அந்நிறுவனத்துக்கு எழுதுகிறேன்.

இன்னொரு மெகா, சினி டைம்ஸ் தயாரிக்கும் முத்தாரம். இதில் தேவயானி நடிக்கிறார். ஆர். கணேஷ் இயக்கும் இத்தொடருக்கும் நான் வசனம் எழுதுகிறேன்.

தினமும் குறைந்தது பத்தொன்பது மணி நேரங்கள் பணியாற்ற வேண்டியிருப்பதால் இணையத்துக்கு அதிகம் வர முடிவதில்லை. இருந்தாலும் ட்விட்டரில் தொடர்ந்து இயங்கிக்கொண்டுதான் இருக்கிறேன் – நள்ளிரவுப் பொழுதுகளில். என் ஒரே தகவல் தொடர்பு சாதனமாகவும், ஒரே பொழுதுபோக்காகவும் ட்விட்டர்தான் இருக்கிறது இப்போது. பத்திரிகை எழுத்து, புத்தக எழுத்து இரண்டுமே இப்போதைக்கு சாத்தியமில்லாமல் இருக்கிறது. இந்த உறுத்தல் கொஞ்சம் அதிகமாகவே இருப்பதால் கூடிய சீக்கிரம் ஒரு பத்திரிகைத் தொடரையாவது ஆரம்பிக்க நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

நாளை தம்பி வெட்டோத்தி சுந்தரம் ரிலீஸ் ஆகிறது. இரண்டு நாள் இடைவெளியில் – எதிர்வரும் திங்கள்கிழமை முதல் சன் டிவியில் உதிரிப்பூக்கள் (மாலை 6.30), முத்தாரம் (காலை 11) இரண்டு மெகா தொடர்களும் ஆரம்பமாகின்றன. நண்பர்கள் பார்த்துவிட்ட, கருத்துகளை எனக்கு மின்னஞ்சல் செய்யலாம். நள்ளிரவுக்குப் பிறகு எப்படியும் சில மணிநேரங்களாவது ஆன்லைனில் அகப்படுவேன். அப்போது பேசலாம். இருக்கவே இருக்கிறது ட்விட்டர்.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

38 comments

  • ஒரே சமயத்தில் இத்தனை அசைன்மெண்ட்டுகளா? அசுரத்தனமான அசத்தல். உங்களுடைய எல்லா முயற்சிகளுக்கும் பலன் கிடைக்க வாழ்த்துக்கள்.

  • சூப்பர்!

    மகிழ்ச்சி! வாழ்த்துகள்!

    ஏற்கனவே 23.59 மணி நேரங்கள் வேலை வேலை என்று அலைவதாக அண்ணியிடமிருந்து புகார். இதில் இப்படி வேறா?!

    என்னவோ போங்க! அடுத்த வருஷம் டிசம்பர் மாதம் பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா சார்?! 😉

  • வாழ்த்துகள் 🙂 #திருஷ்டி சுத்தி போட்டுக்கோங்க

  • குருவே! பாஸ்டன் பாலா சொன்னதையே தான் நானும் சொல்றேன் 🙂 கூடவே இன்னொண்ணும். தயவு செஞ்சு இந்த அமர்க்களத்துல உடம்பு கெடாம பாத்துக்கோங்க!

  • புத்தக கண்காட்சி அரட்டை உண்டா? அரங்கு மறைவில் பார்க்கலாமா?

    • காத்தவராயன்: அலையவே வேண்டாம். ஒரு பெண்டாட்டியும் அவளுடைய மாமியாரும் மட்டும் போதும். உலகப் பெண்களின் மனமெல்லாம் உள்ளங்கையில்.

  • உங்களைப் பற்றி இட்லி வடையில் கிசுகிசு பாணி கட்டுரையை வாசித்தீர்களா?

    • என்னைப் பற்றி கிசுகிசுவா? அட நாராயணா. படித்தபோது எனக்கு வேறென்னவோ அல்லவா தோன்றியது? வரவர இட்லிவடை இலக்கிய சைட்டாகிக்கொண்டிருக்கிறதா? யாருக்கும் ஒழுங்காகப் புரிவதேயில்லை.

  • உங்கள் கடிகாரத்தில் மட்டும் 48 மணி நேரமா இருக்கிறாதா ?? வாழ்த்துக்கள் பா.ரா சார்.

  • மகிழ்ச்சி.நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்…தங்களது அனைத்து முயற்சிகளும் வெற்றியடையட்டும்.

  • புத்தக காட்சிக்கு புது புத்தகம் எதுவும் ரிலீஸ் இல்லையா சார் ???? 🙁 ???

  • ஒரு நாளில் பத்தொன்பது மணி நேர உழைப்பா?

    ஆச்சரியப் படுத்தறீங்க. நீங்கள் எங்கோ பயணித்துக் கொண்டிருக்கின்றீர்கள். நான் உங்கள் தடங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்களின் ”நிலமெல்லாம் ரத்தத்தில்” விழுந்து புரண்டு எழுந்து, இப்பொழுது “மாயவலை” -யில் சிக்கியிருக்கிறேன்.

    தற்போதைய எந்த பணியும் தொய்வில்லாமல் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  • அடுத்தடுத்த புதிய அல்லது பழைய பாதைகளில் வீரிட்டு செல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே !!! ஆனால் எழுத்தாளன் பா ரா இதில் மூழ்காமல் மீண்டும் திரும்பி புத்தகங்கள் எழுதுவது தான் அநேகரின் விருப்பம். காத்திருக்கலாமா?

  • நீர் என்ன மணிரத்னமா , சீரியல்/படம் ரெலீசாகும் போது மீடியா (இணையம்) கவனம் வரும்.

    மத்தபடி வாழ்த்துகள் சாரே

  • போச்சு போச்சு ஏற்கனவே சீரியலுக்கு அடிமையா இருக்குற தாய்மார்களை உங்க வசனத்தால மேலும் பைத்தியமா ஆக்கபோறீங்கன்னு நினைக்கிறேன். இருக்கட்டும். உங்கள் வாசகர்கள் அனைவரும் சொல்ல நினைப்பதை தான் நானும் சொல்கிறேன் தயவு செய்து உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். திருமூலர் சொன்னதை உங்களுக்கு நினைவுபடுத்த தேவையில்லை என நினைக்கிறேன். என்ன தான் வாழ்த்துகள் சொன்னாலும் தங்கள் உழைக்கும் நேரத்தின் அளவு மனதிற்கு கவலை அளிப்பதாக உள்ளது.

  • நீங்கள் உழைத்துக் கொண்டிருக்கும் 19 நேரம் எனக்கு ஆச்சரியமல்ல. அதே அளவுக்கு இங்கேயும் உழைப்புண்டு. ஆனால் நமக்கு பிடித்த துறையில் நாம் உழைத்துக் கொண்டிருப்பது தான் மனம் தேடும் மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள்.

  • நிச்சயமாக இந்த்த வயதிற்கு இது அசுரப்பணி தான்.இனிமேல் உங்களை மீடியாவின் கலைஞர் என தாரளமாக அழைக்கலாம்

  • நாளொன்றுக்குப் பத்தொன்பது மணி நேர உழைப்பா? ப்ரமிப்பாக இருக்கிறது. ஏனெனில் 13, 14 மணி நேரத்துக்கே இங்கே முடியவில்லை. நீங்கள் பூரண உடல் நலத்துடன் வாழ என் ஐயன் ஐயப்பன் அருள்புரியட்டும்.

  • appo total serial story-ya pa.ra kittaye kettu therinjukkalam. no need to wait for 2-3 years to get the serial climax 😀

  • uthiripookkal good start.keep it up.dialogues are so lively.vaazhthukkal..ve.ki.amirtharaj,thirumathi selvam writer.

  • ragavan sir,
    take care.i wish u for a health and wealth in ur portfolio.
    we are eagerly awaiting for ur book.

  • அன்புள்ள பாரா,
    ஒரு மாதிரி இது எதிர்பார்த்ததுதான்.

    இந்த காரணத்திற்காகத்தான் பத்திரிகை\பதிப்புத் துறையிலிருந்து விலகுகிறீர்களா என்று வினவிய போது நீங்கள் பதிலளிக்கவில்லை.

    எனது ஊகம் சரியானதில் எனக்கு மகிழ்ச்சி.

    ஆனால் ஒரு படைப்பாளி காட்சி ஊடகத்தில் நீர்க்க ஆரம்பித்திருப்பதில் மிக வருத்தமும் இருக்கிறது.உங்களுக்கு இந்த மாற்றம் பல வகைகளில் மகிழ்ச்சி அளிக்கக் கூடும் என்ற போதிலும்!

    வாழ்த்துக்கள் மட்டும் இப்போது!

  • அல்லிகளே வில்லிகளாகவும் லில்லிகளாகவும் வந்து மிரட்டியும் புரட்டியும் போடும் தொடர்களில் ராமநாரயணனின் கதாநாயகர்களாக (நாய் குரங்கு )ஆண்கள் வருவது என்னய்யா அது ?!!

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading