கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 4)

தூக்கு மேடையில் ஏற்றப்பட்டு கயிற்றிலும் மாட்டப்பட்டு விட்ட ஒரு மரண தண்டனை கைதிக்கு யாருமே எதிர்பாராத விதத்தில் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், மனித வாழ்க்கைக்கு அதைவிட மிகப் பரபரப்பான ஒரு திருப்புமுனை வேறு எதுவும் இருக்க முடியாது. சூனிய வாழ்க்கையிலும் அப்படித்தான் போலும்.
தத்துவார்த்தமாக மிகவும் தீவிரமாக சென்று கொண்டிருந்த கதை சூனியன் நீல நகரத்தில் வந்து குதித்த பின்னர் சட்டென்று நகைச்சுவை தளத்துக்கு மாறிவிட்டது. அந்த கோவிந்தசாமி யைப் பார்த்து “யோவ் நீ எல்லாம் ஒரு மனுஷனாய்யா” என்றுதான் கேட்கத் தோன்றுகின்றது. அற்பனுக்கு வாழ்வு வந்தால் என்கின்ற பழமொழி குறிப்பிடுகின்ற அற்பன் இந்த கோவிந்தசாமி தான்.
40 ஆண்டுகால வாழ்வை ஒரு அத்தியாயத்தில் சுருக்கமாக சொல்வது கடினம் தான். ஆனால் அதையும், தான் சிரிக்காமல் பேசி மற்றவர்களை சிரிக்க வைக்கின்ற ஒரு நகைச்சுவை தொனியில் அங்கதமாக சொல்ல பாராவால் மட்டும்தான் முடியும். உண்மையில் இது தீவிரமாக சொல்லப்பட்ட ஒரு முன் கதைச் சுருக்கமாகக் கூட இருக்கலாம், ஆனால் படித்த எனக்கு சிரிப்புதான் பொங்கி வருகின்றது.
சில சந்தேகங்கள்.
*இரண்டு செங்கல்கள் என்று தானே வர வேண்டும்? இரண்டு செங்கல் என்று வந்திருப்பது ஏதேனும் குறியீடாக இருக்குமோ?
*ஏன் ‘பிளேட்டை’ த் தான் கழுவ வேண்டுமா ‘தட்டை’ க் கழுவக்கூடாதா?
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி