கதையை படித்தவுடன் “An Idle man’s mind is devil’s workshop” என்னும் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. வெற்றிடத்தில்…. சோம்பேறிகளின் பாசறையில்…. சாத்தான் சுலபமாக இடம் கொள்ளும். சுயசிந்தனை இல்லாதவர்களை தன் விருப்பம்போல் ஆட்டுவிக்கும் .அத்தகு சாத்தான் எனப்படும் சூனியனைப் பற்றிய அறிமுகத்துடன் தொடங்குகிறது கதை.
குழந்தை பருவத்தில் படித்த காமிக்ஸ் கதைகளை நினைவூட்டுகிறது ஆசிரியரின் வரிகள்.முற்றிலும் புதியதொரு உலகத்திற்கு நம்மை அழைத்துச்செல்கிறது கதை. ஆசிரியரின் கற்பனை சிறகுகள் இன்றி எல்லைகள் கடந்து பறக்கின்றது.
தனிமனித அழிவோ… ஒரு இனத்தின் அழிவோ… அழிவிற்கு காரணமாக இருப்பது சூனியனே.எடுத்துக்காட்டாக இயேசுவின் அழிவிற்கும்,யாதவ குலத்தின் அழிவிற்கும் காரணமாக இருந்தது சூனியர்களே .
இக்கதையில் ஒரு சிறிய இனக்குழுவினர் சிந்தனையில் குடியேறி, மாபெரும் சமூகப் புரட்சியை உண்டாக்கி, ஒருவரையொருவர் தாக்கி அழித்துக் கொண்டு, பல லட்சம் பேர் மடிந்தொழிய அனுப்பி வைக்கப்பட்ட சூனியன் சந்தர்ப்பவசத்தால் துரோகி என முத்திரை குத்தப்படுகிறான்.
தான் குற்றமற்றவன் என நிரூபிப்பதற்கான சந்தர்ப்பங்கள் மறுக்கப்பட்டு, குற்றவாளியாக நியாய கோமான் முன்பு நிறுத்தப்படும் சூனியன் தப்பித்துவிட நினைப்பதாக அத்தியாயம் முடிவடைகிறது.
இல்லாமல் போவதல்ல மரணம். இல்லாமல் போவதை உணர்தலே மரணம் என்னும் வரிகள் சுய அலசல் மேற்கொள்ளவைக்கிறது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.