சூனியன் – கோவிந்தசாமி சந்திப்புக்கு வெகுநாட்களாகக் காத்திருந்தேன். இந்த அத்தியாயத்தில் அது நிறைவேறியது. சூனியன் நீல நகரத்தில் நுழையும்போது, கோவிந்தசாமிக்கு உதவுவதாக வாக்களித்திருந்தான். நாட்கள் நகர நகர சூனியனே கோவிந்தசாமிக்கு எதிராய் வேலைகள் செய்ததேன் எனக் குழம்பியிருந்தேன். இந்த அத்தியாயத்தில், சூனியனே அதற்கான காரணங்களை விளக்குகிறான்.
முதற் காரணம்: கோவிந்தசாமியிடம், சூனியன் தான் திரும்பி வரும் வரை காத்திருக்குமாறு கூறியதை மீறியது.
அடுத்த காரணம்: சூனியனுக்கு எதிராய் வேலை செய்தது.
அடுத்தது:
அருமையான
தனிமை கிடைத்தும், அதை உபயோகம் செய்யாமல், கவிதை எழுதியது.
இப்படி காரணங்களை அடுக்கிக் கொண்டே போகிறான். இருந்தும், கோவிந்தசாமிக்கு தான் உதவுவதாக வாக்களிக்கிறான். கூடவே, சூனியன் தன்னை தானே கதையின் நாயகன் எனப் பிரகடனப்படுத்தி கொள்கிறான்.
எவ்வளவு தான் சொன்னாலும், கோவிந்தசாமி திருந்தியதாகத் தெரியவில்லை. சாகரிகாவிடம் மலரைக் கொடுக்கவே குறியாக இருக்கிறான். ஆனால் அந்த மலரை முகர்ந்தால், சாகரிகா கோவிந்தசாமியை கொலை கூடச் செய்து விடுவாளென மிரட்டுகிறான். இதைக் கேட்டதும், கோவிந்தசாமி நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்து விழுகிறான்.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!