சென்னை புத்தகக் கண்காட்சி – சில விவரங்கள்

நாளை மறுநாள் வியாழக்கிழமை சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. சில விவரங்கள்:

* அப்துல் கலாம், கண்காட்சியைத் தொடங்கிவைக்கிறார்.

* இடம், வழக்கமான பூந்தமல்லி நெடுஞ்சாலை, செயிண்ட் ஜார்ஜ் பள்ளி மைதானம்.

* மொத்த ஸ்டால்கள் 600. பரப்பளவு ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் சதுர அடி.

* வருபவர்களுக்குத் தேவையான உணவு, பானங்கள் வசதிக்காக 5000 சதுர அடியில் தனி வளாகம்.

* இந்த வருட கருணாநிதி பொற்கிழி விருது [ரூபாய் ஒரு லட்சம்] பெறும் படைப்பாளிகள்: கவிஞர் சி. மணி, சிறுகதை ஆசிரியர் ஆர். சூடாமணி, கட்டுரையாளர் க. நெடுஞ்செழியன். பிற மொழி எழுத்தாளர்கள் வரிசையில் கன்னட நாடகாசிரியர் கிரிஷ் கர்னாட், ஆங்கிலத்தில் எழுதும் தமிழர் எஸ். முத்தையா.

* 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு நுழைவுக் கட்டணமில்லை. [நுழைவுக்கட்டணம் 5 ரூபாய்]

* வார நாட்களில் பகல் 2.30 மணி முதல் இரவு 8.30 வரை கண்காட்சி திறந்திருக்கும். விடுமுறை தினங்களில் காலை 11.30 முதல் இரவு 8.30 வரை.

* வழக்கம்போல் தினசரி கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் உண்டு. 17.01.2009 அன்று சிறப்பு விருந்தினராக வருபவர் சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை.

இந்த விவரங்கள் நேற்று பதிப்பாளர் சங்கத் தலைவரால் வெளியிடப்பட்டவை.

Share

3 comments

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter