இந்த அத்தியாயத்தைப் படித்து முடிக்கும் சமயம், மனம் கனத்துப் போய் நிற்கிறது. கரு கலைப்பு குறித்து சாகரிகாவைச் சாடி உணர்ச்சிமிக்க ஒரு பதிவை ஏற்றம் செய்கிறான் சூனியன், அவன் தான் கோவிந்தசாமியை ஆக்ரமித்து, செம்மொழிப்ரியாவாகவும், பதினாறாம் நரகேசரியாகவும் பதிவுகளை செய்து வருகிறான். எதிர்பார்த்தது தான்.
செம்மொழிப்ரியாவுக்கு ஆதரவுகள் குவிந்தும், சாகரிகாவிற்கு எதிர்ப்புகள் வந்த வண்ணமாய் இருக்கிறது.
மேலும் செம்மொழிப்ரியாவுக்கு காதல் மனுக்கள் வேறு வரத்தொடங்கிவிட்டது.
இந்த அத்தியாயத்தின் எழுத்து நடை அபாரமாக அமைந்துள்ளது. ‘குழம்பித் தெளிவதைவிட கும்பிட்டுத் தெளிவது சுலபம்’ – இவ்வளவு ஆழமான கருத்தை ஒற்றை வரியில் நம்மிடம் சேர்த்து விட்டார் எழுத்தாளர். இப்படி பல இடங்களில் சொற்களைக் கொண்டே நம்மை கட்டிப் போடும் வித்தை ஒன்றை கைவசம் வைத்திருக்கிறார் நம் பாரா.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!