அனுபவம்

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 20)

இந்த அத்தியாயத்தில் மீண்டும் ஷில்பாவை களம் இருக்கிறார் எழுத்தாளர். ஷில்பாவின் அறிமுகத்திலிருந்தே சரியிலான கோணத்தில் அவளைப் பொருத்தி பார்க்க முடியவில்லை. ஒரு பக்கம் பிரஜை ஆகாமல் வெண்பலகையை வாசிக்கிறாள், இன்னொரு பக்கம் கோவிந்தசாமியுடன் நடந்த உரையாடலில் புதிதாய் சில விடயங்களை சேர்த்து சொல்கிறாள். யார் இவள்? – இந்த கேள்விக்கு குழப்பம் தான் மிஞ்சுகிறது.
கலாசாரத்துறை செயலாளர் பதவிக்கு சாகரிகா நியமிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடக்கும் பட்சத்தில், செம்மொழிப்ரியாவின் அறிவிப்பு நீலநகர பிரஜைகளிடத்தில் சாகரிகாவின் மீது அவநம்பிக்கையை விதைக்கிறது. அவள் எவ்வளவு மறுத்தும், எதிர்ப்புகள் வர வண்ணமாய் இருக்கிறது.
இதற்கிடையில் புதிதாய் பதினாறாம் நரகேசரி என்ற பெயர் கொண்ட பிரஜையின் பதிவு, அவள் நீல நகரத்தில் தொடர்ந்து வசிக்கக்கூட வாய்ப்பில்லாமல் போய்விடும் நிலைக்கு தள்ளிவிடும் போல் இருக்கிறது.
ஷில்பாவிடம் ஆறுதல் தேடுகிறாள் சாகரிகா, கோவிந்தசாமியின் காதல் மீது அவளுக்கு இருக்கும் அசைக்க முடியா நம்பிக்கை சிலிர்க்க வைக்கிறது. சூனியன் எங்கு சென்றான்? என்ன செய்கிறான்?
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி