சமச்சீர் படுகொலை வழக்கு

இந்த வருடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் படித்திருக்க வேண்டிய – தெய்வாதீனமாகத் தப்பித்த –  சமூக அறிவியல் புத்தகத்தில் இருந்து சில வரிகளைக் கீழே கொடுத்திருக்கிறேன். இதில் உள்ள சொற்பிழை, பொருட்பிழை, இலக்கணப் பிழைகள், சொற்றொடர் அமைப்புச் சிக்கல்கள்  எதற்கும் நான் பொறுப்பில்லை. புத்தகம் முழுவதுமே ஒரு சிறந்த நகைச்சுவை நூலை வாசித்த உணர்வைத் தந்தது என்பதை அவசியம் குறிப்பிட விரும்புகிறேன். சமச்சீர் பாடத்திட்டங்களைத் தமிழக அரசு ரத்து செய்ததற்கு அரசியல் காரணங்கள்தாம் முக்கியம் என்றாலும் அரசோ, முதல்வரோ கவனித்திருக்க வாய்ப்பில்லாத சில நியாயமான காரணங்களும் இருப்பதை நாமாவது உணரலாம்.

இந்த அற்புதமான நூலை உருவாக்கிய ஆசிரியப் பெருமக்களை நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுகிறேன்.

  • காமராஜர் தமிழக முதலமைச்சராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார். பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தினார். மதிய உணவுத்திட்டம், புதிய பள்ளிகளைத் திறந்து, இலவச கல்வி வழங்குதல், வேளாண்மையை மேம்படுத்துதல், கால்வாய்களை வெட்டுதல், அணைகளைக் கட்டுதல் மற்றும் புதிய தொழிற்சாலைகளை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார். தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகித்தார். இதனால் அரசரை உருவாக்குபவர் எனப் போற்றபட்டார்.
  • சாது மகாராஜா மூங்கிர் மாவட்டத்திலுள்ள செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவர் வைணவராக மாறினார். இவருக்குமுன் இவரது குடும்பத்தினர் அனைவரும் சைவ சமயத்தை சார்ந்து சிவனை வழிபட்டனர்.
  • சுற்றுச்சூழல் அனைவருக்கும் சொந்தமானது. ஒவ்வொருவரின் தேவையை பூர்த்தி செய்யக்கூடியதே அன்றி ஒவ்வொரு மனிதனின் பேராசைகளை அல்ல. பெருகிவரும் பேராசை நம்மை மிகவும் கடினமான சூழலுக்கு வெவ்வேறு பிரச்சனைகளாக கொண்டு செல்கிறது.
  • 1858ஆம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநரும் முதலாம் வைசிராயும் ஆன கானிங் பிரபு அலகாபாத்தில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையை வெளியிட்டார். அது இந்திய மக்களின் மகாசாசனம் என்று கருதப்பட்டது. இப்பேரறிக்கையின் படி இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை இனி இங்கிலாந்து அரசி நேரடியாக மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. எனவே அவருக்கு பதிலாக அவரது பிரதிநிதி இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது.
  • கி.பி. 1939 முதல் கி.பி. 1945 வரை நடைபெற்ற இரண்டாம் உலகப்போர், உலகளாவிய ஒரு பெரும் போராக கருதப்படுகிறது.
  • ஹிட்லர் ஜெர்மனியின் பெருமையை வெளிப்படுத்தினார். ஜெர்மானியர்கள் உலகின் மிக உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். நார்டிக் ஜெர்மானிய இனத்தினர் மிக உயர்ந்தவர்கள் என்றும், செமிடிக் யூதர்கள் மிகவும் தாழ்ந்தவர்கள் என்றும் கருதினார். நார்டிக் இனத்தின் தனித்தன்மையைக் காக்கும் பொருட்டு செமிடிக் யூதர்களை வெறுத்து ஒதுக்கினார். அவரது வெறுப்பின் உச்சக்கட்டமே யூதர்களின் படுகொலை ஆகும். ஹிட்லர் செயல்பாடு, வன்முறை தீவிரவாதம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தார். மக்கலின் உரிமைகள் பறிக்கப்பட்டன… [மேலும் நீளும் இப்பகுதியின் தலைப்பு  ‘ஹிட்லரின் சாதனைகள்’]
  • கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் எதிர்பார்த்த வண்ணம் உலக அமைதிக்கு ஏற்பட்ட பங்கமே முதல் உலகப்போர் என்று கருதப்படுகிறது.
  • பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரே ஒரு நிலப்பகுதிதான் இருந்தது. இதைச் சுற்றி பெருங்கடல்கள் சூழ்ந்திருந்தன. இவ்வாறு இருந்த நிலப்பகுதிக்கு ‘பாஞ்சியா’ என்றும் அதைச் சுற்றியுள்ள நீர்ப் பகுதிக்கு ‘பாந்தலாசா’ என்றும் அழைக்கப்பட்டது. இவ்வாறு பரந்த நிலப்பகுதி இரு பகுதிகளாகப் பிரிந்தது.
  • இராமகிருஷ்ண இயக்கம், இராமகிருஷ்ண பரமஹம்சரின் பெயரை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது. இது ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம். சுவாமி விவேகானந்தர் என்பவரால் 1897 ஆம் ஆண்டு மே 1ம் நாள் துவங்கப்பட்டது.
  • வல்லரசு நாடுகளின் பெருந்தலைவர்கள் தங்களது கொள்கைகளை மறந்து போலியான அமைதி கொள்கையினைப் பின்பற்றினர். அவர்களது கொள்கையினை ஏகாதிபத்திய நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்தன. இது இரண்டாம் உலக போருக்கு வழி வகுத்தது.
  • பன்னாட்டு நிறுவனங்கள் என்பது பல நாடுகளில் தங்களது தொழிற் நிறுவனங்களை தொடங்கி நடத்தி வரும் அமைப்புகளாகும்.
  • பொருட்கள் என்பது உற்பத்தி செய்யப்பட்ட கார்கள், இரு சக்கர வாகனங்கள், கப்பல்கள், இரயில் எஞ்சின்கள், பேனா, பென்சில், அரிசி, கோதுமை மற்றும் சமையல் எண்ணை போன்ற பொருட்களைக் குறிக்கும்.
  • இந்திய மொழிகளின் வளர்ச்சி இந்திய இலக்கியங்கள் உன்னத நிலையை அடைய உதவுகின்றன.

மற்ற பாடங்களையும் இப்போது தீவிரமாக வாசித்து வருகிறேன். தமிழ்ப் பாடநூலை வாசித்து முடித்துவிட்டேன். அது இந்த சமூக அறிவியல் புத்தகத்தைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்த நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்டிருக்கிறது. வாசகர்கள் ஏகோபித்து விரும்பிக் கேட்டால் அதிலிருந்தும் சில வைரமணிகளைப் பொறுக்கிப் போடலாம்.

 

Share

61 comments

  • சிரிச்சி சிரிச்சி நெஞ்சு வலிக்குது! முடியல!

  • வரலாறு படைத்தல்,வரலாற்றை மாற்றி அமைத்தல்,வரலாற்றுப் பிழை – இந்த சொல்லாடல்களின் அர்த்தம் புரிந்தது இந்த அபத்தங்களை படிக்கும் பொழுது..
    மெல்லத் தமிழ் இனி சாகும் என்ற பாரதியின் கனவை மெய்ப்பிக்கும் சமச்சீர் தமிழ் புத்தகத்தின் வைர வரிகளைப் பொறுக்கிப் போடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

  • Interesting to see how Karuna wanted to Develop Tamil through this. Please read all Books 🙂 and educate us.

  • அட கடவுளே. இதையெல்லாம் படித்துத்தான் நம்பிள்ளைகள் மேலுக்கு வரவேண்டுமா? இவர்கள் (எழுதியவர்கள்) எல்லாரும் ஆசிரியர்கள்தானா? பணம் கொடுத்து பதவிக்கு வந்த போலி ஆசிரியர்களா? முகத்திரையைக் கிழித்தமைக்கு நன்றி.

  • வாழ்க ஆசிரிய பெருமக்கள். பாவம் மாணவர்கள்.
    இந்த நாட்டை ஆண்டவன் காக்கட்டும்

  • தமிழ்ப் பாடநூலை வாசித்து முடித்துவிட்டேன். அது இந்த சமூக அறிவியல் புத்தகத்தைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்த நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்டிருக்கிறது. வாசகர்கள் ஏகோபித்து விரும்பிக் கேட்டால் அதிலிருந்தும் சில வைரமணிகளைப் பொறுக்கிப் போடலாம்.

    இதெல்லாம் சொல்லிட்டு இருப்பாங்களா. டப்பு டிப்புனு அடுத்த பதிவை ஆரம்பிங்க சார்,,,,,

  • ஆகா… இனிமேல் நான் எழுத்துபிழையோட எழுதினா கிண்டல் பண்ணிப்பாருங்க, சம்ச்சீர் புத்தகங்க எழுதிய / தொகுத்த ஆசிரியர்களுடன் ஒரு மாசம் தனி சுற்றுலா ஏற்பாடு செய்யறேன்! :))))

  • ஹா ஹா! என்னோட சமூக அறிவியல் தேர்வு விடைத்தாள் இப்படித்தான் இருக்கும். வழக்கமா பசங்கதான் எக்ஸாம்ல இந்த மாதிரி கதைவிடுவாங்க! இப்ப புக்குலையேவா! விளங்கிடும்!

  • //வல்லரசு நாடுகளின் பெருந்தலைவர்கள் தங்களது கொள்கைகளை மறந்து போலியான அமைதி கொள்கையினைப் பின்பற்றினர். அவர்களது கொள்கையினை ஏகாதிபத்திய நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்தன. இது இரண்டாம் உலக போருக்கு வழி வகுத்தது.//

    தி பெஸ்ட்?

  • செம கலாட்டாவா இருக்கு…The government has a big role to play என்பதை, ‘அரசு விளையாடுவதற்கு ஒரு பெரிய உருளையை வைத்திருக்கிறது’ என்று மொழி பெயர்த்தவர்களாயிற்றே நம் ஆசிரியப் பெருமக்கள்!

  • // வாசகர்கள் ஏகோபித்து விரும்பிக் கேட்டால் அதிலிருந்தும் சில வைரமணிகளைப் பொறுக்கிப் போடலாம்.//

    போடுங்க… போடுங்க…:)

  • ஐயா, தெரிந்துகொள்வதற்காக கேட்கிறேன். சமச்சீர் பாடப்புத்தகங்கள் இன்று நீக்கப்பட்டுவிட்டன என்றபோதிலும், இத்தனை மோசமானப் புத்தகங்களை எழுதி மாணவர்கள்மீது திணிக்க நினைத்த ஆசிரியர்களின்மீது பொதுநல வழக்குத் தொடுக்க வாய்ப்பு உண்டா?

  • சரியான நகைச்சுவை. ஆனால் கூடவே வருத்தமும். இன்னொரு வருத்தம் என்னவென்றால் ஆசிரியர்கள் செய்யும் பரீட்சைத்தாள் திருத்தும் பணி (1-2 நிமிடம்/தாள்?!). அவர்களின் மூட்-டை பொருத்து மதிப்பெண். கண்டிப்பாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

  • கேள்வி எண் – 1

    இங்கே நீல வண்ணத்தில் உள்ள எழுத்துக்கள் பிழையா? அல்லது கருப்பு வண்ணத்தில் உள்ள எழுத்துக்கள் பிழையா? தெளிவுபடுத்தவும். 🙁

    பிழையான எழுத்துக்கு மஞ்சள் வண்ணமும், பிழையற்ற எழுத்துக்கு பச்சை வண்ணமும் பயன்ப்படுத்தியிருந்தால் பொருத்தமாயிருந்திருக்கும். 🙂 🙂

    கேள்வி எண் – 2

    ஜூன் 15ஆம் தேதி பச்சையம்மா வெளியிடப்போகும் புத்தகத்தில் இருந்தும் பிழைகள் கண்டுபிடித்து பதிவு வெளியிடுவீர்களா?

    கிழக்கில் குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர் என்று முகில் (ஆயிரத்தில் ஒருவன் பாடல் விமர்சனம்) ஒரு முறை குறிப்பிட்டிருந்தது சரிதான்,

    இவன்

    கோயிஞ்சாமி எண் 408
    பொருளாளர்,
    அகில இந்திய “லக்கிலுக்” யுவகிருஷ்ணா ரசிகர் நற்பனி மன்றம்.

  • இன்னும் என்னென்ன உள்ள இருக்குதோ தெரியலையே, நடந்தது எல்லாம் நன்மைக்கே!!!

  • சமச்சீர் புத்தகம் மட்டுமல்ல, இதற்கு முந்தய புத்தகமும் இப்படித்தான் இருந்தது. # இவ்வளவு நுணுக்கமாக தவறு கண்டுபிடித்தால், எந்த புத்தகமும் தேறாது. உங்களுக்கு என்னமோ ஆகிவிட்டது.

    • jill_online: நான் முந்தைய புத்தகங்களை வாசித்தவனல்லன். இந்தப் புத்தகங்களையே பிரச்னை என்று வாராதிருந்தால் வாசித்திருக்க மாட்டேன். பொதுவாக எனக்குப் பாடப்புத்தகங்கள்மீது அவ்வளவு நல்ல அபிப்பிராயம் கிடையாது. மாணவர்களைப் படிப்பிலிருந்து விரட்டியடிக்கும் விதமாகவே அவை எழுதப்படுகின்றன என்பது நான் படித்த காலத்தில் எழுந்த அபிப்பிராயம். ஓர் இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் ஒரு பாடப்புத்தகத்தை வாசித்தபோது அந்த அபிப்பிராயம் அப்படியே இருப்பதும் இன்னும் சற்று பரிணாம வளர்ச்சியுற்றிருப்பதும் உண்டாக்கிய வெறுப்பில்தான் இந்தச் சில வரிகளை எடுத்துப் போட்டேன். மாணவர்கள் என்ன படிக்கவேண்டும் என்று ஆசிரியர்கள் தீர்மானிக்கலாம். ஆனால், படிப்பதற்கான பிரதியை சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்களின் உதவியுடன், எழுதத் தெரிந்தவர்கள்தான் எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். பத்தாம் வகுப்பு என்பது மாணவர்கள் ஒரு கட்டத்திலிருந்து அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரும் புள்ளி. அந்தப் படிப்பில் இத்தனை அலட்சியமும் மேம்போக்குத்தனமும் பிழைகளும் அபத்தங்களும் மலிந்திருக்கலாமா?

  • people even here are not talking about the mistakes, but they start the politics in it. just think about the students and their future..
    let the book authors read this article.

  • சமையல் எண்ணை ? வடிகிறது

    மெல்ல ஊஹூம் வேகமாகத் தமிழ் இனி சாகும்…
    சமச்சீராக எல்லோரையும் மழுங்கடிப்பது நோக்கமாக இருக்குமோ!

  • இன்னும் கொஞ்சம் சமசீர் விருந்துக்கு ஏங்குகிறது மனது … ச்சே…. கற்றலின் இனிமைன்னு பேர் வேற இதுக்கு
    வேறு எடுத்துகாட்டுகளோடு விளக்கவும்

  • தெய்வாதீனமாக அரசுப் பாடத்திட்டதைப் பயிலாதவர்கள் தப்பித்தார்கள் என்றால் இன்னும் பொறுத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அரசுப் பாடத்திட்டத்தை காலா காலாமாக பயில்பவர்களுக்கு இதுதான் நிலை. நான் படித்த காலத்திலும் இது போல நிறைய பிழைகள் இருந்தன. இதற்குக் காரணம் ஆசிரியர்களின் ஆங்கில மோகமே! ஆசிரியர்கள் முதலில் (அரைகுறை) ஆங்கிலத்தில்தான் எழுதுகிறார்கள். பொறுமையாகத்தான்(அரைகுறை ஆங்கில ஞானம்)! பிறகு அவசர அவசரமாக தமிழில் மொழிபெயர்க்கிறார்கள். பல அரசுப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களின் மனநிலை இதுதான். ஒருவேளை ஆங்கிலப் புத்தகங்களில் இதுபோன்ற பிழைகள் இல்லாமல் இருக்கலாம். யாராவது பரசீலித்துச் சொன்னால் நல்லது. பிழையுள்ள புத்தகங்கள்தான் பழைய அரசுப் பாடத்திட்டப் புத்தகங்களும்!

  • டமாசு… டமாசு…
    தமிழ் புத்தகத்தில் “தங்கச்சிக்கு கண்ணாலம் … தங்கச்சிக்கு கண்ணாலம்…” என்று லக்கி மேன் படத்தில் வரும் கவிதை(?) இருக்கிறதா…

  • சமச்சீர் கல்வி பற்றிய பதிவிட்டதற்கு முதற்கண் நன்றி!
    ஆனால் நான் எதிர்பார்த்தது இதையல்ல!அந்த திட்டத்தைப்பற்றி..
    மற்றபடி இந்த புத்தகங்களில் இருக்கும் பிழைகளை விட சில பின்நூட்டங்கள்
    கவலை அளிப்பதாக உள்ளன..
    //சமச்சீர் புத்தகம் மட்டுமல்ல, இதற்கு முந்தய புத்தகமும் இப்படித்தான் இருந்தது. # இவ்வளவு நுணுக்கமாக தவறு கண்டுபிடித்தால், எந்த புத்தகமும் தேறாது. உங்களுக்கு என்னமோ ஆகிவிட்டது.//
    நல்ல வேளையாக எவ்வளவு பிழைகள் உள்ளனவோ அதற்கு ஏற்றால்போல தொகையை குறைத்து..என தொடராமல் விட்டாரே!!
    //King Maker-ஐ வேறு எப்படி மொழி பெயர்ப்பதாம்?!//
    தலைமையை உருவாக்குபவர்!!
    //சிரிச்சி சிரிச்சி நெஞ்சு வலிக்குது! முடியல!//
    இதுதான் நம்மைப்பிடித்துள்ள சாபம்..கோபப்படவேண்டிய விஷயங்களைப்ப்பார்த்து நாம் சிரிக்கிறோம்!!
    கொல்லப்படவேண்டிய மனிதர்களை கொண்டாடுகிறோம்!

  • புத்தகம் எழுதி பேர் வாங்கும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள், குற்றம் கண்டு பிடித்தே பேர்வாங்கும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். சிரிக்காதீர்கள், இதில் நீங்கள் எந்த பிரிவை சேர்ந்தவர் என்று உங்களுக்கே தெரியும். என்ன செய்வது புத்தகம் எழுதுற எல்லாரும் உங்களை போல மேதையா இருப்பதில்லை. பார்டர் மார்க்குல பாஸ்பண்ணுனவங்க புத்தகம் எழுத உக்காந்தா இப்படித்தான் நடக்கும்.

  • எது பிழையானது என்று தெளிவாகப் புரியவில்லை. “சமச்சீர் படுகொலை வழக்கு” கட்டுரை இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம்.

  • ராஷித் அஹமத் ஐயா, ராகவன் சார் புத்தகங்களை படிக்கிறவங்க சில ஆயிரம் பேர்கள்…
    அவர் மேதையா இருந்தாலும் இல்லாட்டியும் பிரச்னை இல்ல…
    ஆனா பள்ளி படிக்கிற பல லட்சம் மாணவர்கள் border mark வாங்கினவங்க எழுதுற புத்தகத்தை படிகிறது எவ்ளோ துரதிருஷ்டம்?
    எதிர்கால தூண்களை கலப்பட சிமெண்ட்-ல கட்டலாமா?

  • திரு.பா.ராகவன் அவர்களுக்கு

    சமச்சீர் கல்வித் திட்டத்தைப் பற்றிய தங்களது கருத்தைச் சொன்னால் உங்களது கோணத்தலிருந்து யோசித்துப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும். என்னைப் பொருத்தவரை இந்தத் திட்டம் தேவைதான். இன்னும் ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்து தரமான பாடத்திட்டத்துடன் கொண்டுவர வேண்டும். அனைவருக்கும் சமமான கல்வியைக் கொடுப்பது அவசியம். அதுதான் இந்தியாவின் ஏற்றத் தாழ்வுகளைக் களைய வழிவகை செய்யும். எனக்குத் தெரிந்து மெட்ரிக் பள்ளிகளின் பாடத்திட்டம் தரமானதாக வைத்துக் கொண்டாலும் தகுதியான ஆசிரியர்கள் பயிற்றுவிப்பதில்லை. தேவையில்லாத சுமை மாணவர்கள் மீது திணிக்கப் படுகிறது. மனனம் செய்து தேர்வில் கக்கிவிடுகிறார்கள். அதற்கு குறைவாகப் படித்தாலும் தெளிவாகப் படிப்பது எவ்வளவோ மேலானது. வெகுசில மெட்ரிக் பள்ளிகள் மட்டுமே தரமான ஆசிரியர்களைக் கொண்டுள்ளது.

    கல்வியை எப்படி சமமாக ஆக்குவது என்று கேட்கிறார்கள். இது தவறான வழிக்கு நம்மைச் செலுத்துகிறது. அப்பொழுது அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் யோசிக்கும் திறமையற்ற மூடர்களா? மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் அறிவாளிகளா? அதெல்லாம் கிடையாது என்றே தோன்றுகிறது. வறுமையில் உள்ளவர்களுக்கு அரசுப் பள்ளி. வசதிபடைத்தவர்களுக்கு மெட்ரிக் பள்ளி! ஏன் இந்த ஏற்றத் தாழ்வு? மாணவர்களின் திறமைக்குத் தகுந்தவாறு கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பது ஏற்புடையதே. அதற்குத் தகுந்தவாறு திட்டங்களைத் தீட்டி அரசு செயல்படுத்த வேண்டும். மாணவர்களின் திறமைகளின் அடிப்படையில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். வசதிகளின் அடிப்படையில் இல்லை.

    கல்வி என்பது வெறும் பாடங்களை மனனம் செய்து தேர்வில் மதிப்பெண்களைப் பெறுவது மட்டும்தான் என்பது தவறான கொள்கை. நிறைய விஷயங்களைக் கற்றுத்தர வேண்டும். எதற்குத் தரம் என்று சொல்லித் தேவையில்லாத பாடச்சுமையை மெட்ரிக் பள்ளிகள் மாணவர்கள் மீது ஏற்ற வேண்டும்?

    என்னைக் கேட்டால் சனி ஞாயிறை கட்டாய விடுமுறை தினங்களாக அரசு அறிவிக்க வேண்டும். மீறும் பள்ளிகளின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும். கேட்டால் பாடத்தை முடிக்க முடியவில்லை என்கிறார்கள். பாடச்சுமையைக் குறைத்தால் முடியும் அல்லவா? சற்று விவேகமாகச் சிந்தித்து செயல்படுத்தினால் எல்லாம் சாத்தியமே…..

    அன்புள்ள
    பா.மாரியப்பன்

  • பாட புத்தகங்களின் மேல் யாருக்குதான் நல்ல அபிப்ராயம் உள்ளது. தாங்கள் மாத்திரம் தவறை நீல நிறத்தில் சுட்டி இருக்காவிட்டால் எங்களில் பலருக்கு அது தவறு என்றே தெரிந்திருக்காது. அந்த அளவுக்குத்தான் கல்விமுறை உள்ளது. பாட புத்தகத்தில் உள்ள கருத்தை தன் சொந்த சொற்றொடர்களில் பரிட்சையில் எழுதினால் அதை அப்படியே அடித்துவிட்டு முட்டை போடும் எத்தனையோ அறிவிலி ஆசிரியர்களை கண்டுள்ளேன். சொந்தமாகவே சிந்திக்க விட மாட்டார்கள் (எழுத்தாளர்கள் (சொந்தமாக சிந்திப்பவர்கள் ) பெரும்பாலும் பட புத்தகத்தை வெறுக்கும் உளவியல் இதுதானா?) . அழுது வடியும் பாட புத்தகத்தின் தகவல்களை சிதைக்காமல், கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவுக்கு சுவாரஸ்யமான புத்தகத்தை ஏன் இன்னும் ஒரு எழுத்தாளர் கூட
    எழுதவில்லை? (யாரவது செய்தால் வித்தியாசமாகவும் உபயோகமாகவும் இருக்கும்). எவ்வளவோ செய்யும் கிழக்கு இதை……..

  • என் நண்பர் ஒருவர் கனடாவில் படிப்பு சரியில்லையென்று அவரின் மனைவியையும் மகனையும் இந்தியாவிற்கு அனுப்பி மகனை படிக்க வைக்கப் போகிறார். அவரிடம் இதைக் காட்ட வேண்டும். 🙂

    அவரின் மகன் யுகேஜி முடித்துவிட்டு முதலாம் வகுப்பிற்கு போகிறார் 🙂

  • பாரா,
    சந்திரமௌளீஸ்வரன்(அப்பா..எவ்வளவு கடினமான பெயர்!) கேட்டிருக்கும் கேள்விக்கு நீங்கள் ஏன் பதில் அளிக்கவில்லை.

    இம்மாதிரி மேம்போக்கான பதிவுகளை எழுதி சமச்சீர் கல்வித்திட்டத்தின் நோக்கத்தை நீர்மைப் படுத்துகிறீர்கள்.

    இவ்வார கல்கியில் ஞாநி எழுதிய கட்டுரையைப் படித்தீர்களா?
    கனிமொழி கைது மற்றும் சமச்சீர்க் கல்வி-இரண்டு பற்றியும் அருமையான கருத்துக்களை,ஆலோசனைகளைப் பதிவு செய்திருக்கிறார்…

    உங்களது நேரடியான நேர்மையான கருத்தையும் எழுதுங்கள்..இம்மாதிரி டம்மி பீஸ் எழுத பல பதிவுலக சூப்பர் ஸ்டார்(?)கள் இருக்கிறார்கள்….

  • ”பா.மாரியப்பன்” – அவர்களின் கருத்தோடு முழுக்க முழுக்க உடன்படுகிறேன்.

    நிச்சயம் குறைகளை களைய படவேண்டியது அவசியம், ஆனால் முற்றிலும் நிராகரிக்கப் படுவது, நல்ல செயல் அல்ல…

    நன்றி
    மயிலாடுதுறை சிவா…

  • சரியான நேரத்தில் வெளியான அருமையான விளக்கம்.
    முதலில் பாரா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    சமச்சீர் கல்வி என்பது நல்ல திட்டம் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் அது ஒரு முறைக்கு பல முறை சரி பார்க்க பட்டு தவறுகள் களையப்பட்டு நடைமுறை படுத்தப்படவேண்டும். இங்கு சிலர் கூறி இருப்பதை போல “இவ்வளவு நுணுக்கமாக தவறு கண்டுபிடித்தால், எந்த புத்தகமும் தேறாது.” தவறுகளை சகித்துக்கொண்டு படிக்க எது ஒன்றும் பொழுபோக்கு நாவல் இல்லை. ஒரு புதிய தலைமுறைக்கு நாம் ஏற்படுத்தி கொடுக்கின்ற அடித்தளம். இவை போன்ற மட்டமான பதிப்புகள் குடிநீர் வாய்காலில் கழிவுநீரை சேர்பதுபோல் ஆகிவிடும்.

    இதை அம்மையார் வெளியிட்டு இருந்தாலும், கட்டுமரம் அவர்கள் வெளியிட்டு இருந்தாலும் தவறு தவறுதான். பழைய முறை புத்தகத்தில் தவறுகள் இருந்தால் அவையும் களையப்பட வேண்டியதே. அந்நியன் படத்தில் சொல்வதுபோல் தப்புல என்ன பனியன் சைஸ் மாதிரி small , medium , large ன்னு எல்லாமே தப்புதான்.

    இது போன்ற செயல்கள் அணைத்து ஆசிரியர்களுக்கும் களங்கத்தை உண்டாக்கும்.

  • இது கண்டிப்பாக பார்ப்பனர்களின் சதி, அவர்கள் படித்து முன்னேறி விட்டதால் தமிழ் நாட்டை இந்த கதிக்கு ஆளாக்கி விட்டு விட்டார்கள்.

  • சமச்சீரழிவுக் கல்வித் திட்டத்தில் இப்போது ஜெ. வின் மீது விமரிசனம் வைக்கும் கருத்து கந்தசாமிகள் கூடவே, இப்போது இருக்கும் பாடத்திட்டத்தை மேம்படுத்தி செயல் படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள்.

    அப்படியெனில் ஏற்கனவே அறிமுகப்படுத்தியது திராபை என்று தானே அர்த்தம்?

    எனில், கருணாநிதி அரசை ஏன் கண்டிக்க மறுக்கிறார்கள் இந்த திடீர் கல்விக் கரிசனர்கள்?!

  • ரொம்ப சந்தோசம் அன்பரே தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துவது உங்களின் பொறுப்பு. சில தவறுகள் நடந்து கொண்டுதான் வருகிறது. இன்று இளைஞர் களிடம் கேட்டுப் பாருங்கள். நேரு யார் காந்தி யார் காமராஜ் யார் என்று கேட்டல் சொல்ல தெரிய வில்லை. நேரு எழதிய புத்தகத்தின் பெயர் கூட தெரிந்து வைத்துக் கொள்ள வில்லை. ஆங்கிலத்தில் ஒரு வரி எழுத சொல்லுங்கள் மெத்த படித்தவர்கள் கூட தவறு செய்கிறார்கள். இந்த லட்சணத்தில் பயளது சிறந்த்தது புதியது சிரிப்பு என்று சொல்வது உங்களின் அறியாமை. இதற்க்கு முன் உள்ள மாணவர்களை பற்றி தெரிந்து கொண்டு பேசுங்கள். எனது மகள் காங்கேயம் பகுதியில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளர் வேலைக்கு போனால். அங்கு மாணவர்கள் குண்டு d குட்டி T என்று இரண்டிற்கும் விவரம் தெரியாமல் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்பா இந்த கல்லூரியில் நான் வேலை செய்ய முடியாது என்று கூறி வந்து விட்டாள். கல்லூரிகளின் லட்சணமே அப்படி. கல்லூரி விரிவுரைலளர்கள் காலத்திற்கு தகுந்தாற்போல் வளரவில்லை. மேலும் படித்து உடனே அதே கல்லூரியில் வேலை. என்ன செய்வது. குறை கூறுவதை விட்டு விட்டு. தனியார் பள்ளிகள் வளராமல் அரசு பள்ளிகள் வளர வழி சொல்லுங்கள். இம்மாதிரியான குறை கூறுவதை விட்டு விட்டு வளர்ச்சிக்கு உங்களின் அறிவை பயன் படுத்தி ஆலோசனை கூறுங்கள்.

  • எத்தனை பிழைகள் பாடங்களில் இருந்தாலும் பிழைகளை பிழை இல்லாமல் பிள்ளைகள் எழுதி மதிப்பெண் பெற்றுவிட்டால் அதில் பெற்றோருக்கோ பள்ளிக்கோ அவர்களுக்கு சீட் கொடுக்கும் கல்லூரிக்கோ கூட பிரச்னை ஏதுமில்லை
    சமச்சீர்க் கல்வியை பெற்றோர் வரவேற்காததற்கு காரணம் பிழைகள் இல்லை.
    http://www.virutcham.com/2011/05/சமச்சீர்-பாடங்களில்-பிழை/

  • * இதனால் அரசரை உருவாக்குபவர் எனப் போற்றபட்டார்.

    * சாது மகாராஜா மூங்கிர் மாவட்டத்திலுள்ள செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவர் வைணவராக மாறினார். இவருக்குமுன் இவரது குடும்பத்தினர் அனைவரும் சைவ சமயத்தை சார்ந்து சிவனை வழிபட்டனர்

    –what is the mistake in the above two sentences?

    • அருண். இரண்டு பத்திகளையும் திரும்பப் படித்துப் பாருங்கள். காமராஜ் செய்த செயல்கள் என்று சொல்லப்பட்டிருப்பவைக்கும் அவர் அரசரை உருவாக்குபவர் என்று போற்றப்பட்டதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அதே மாதிரி, சாது மகாராஜா என்பவர் யார்? மூங்கிர் மாவட்டம் என்பது எங்குள்ளது? அந்த மாவட்டத்தில் ஒரே ஒரு செல்வச் செழிப்பான குடும்பம்தான் உண்டா? வைணவராக மாறிய சொற்றொடர் எந்த இடத்தில் வரவேண்டும்? ஏதாவது ஓரம்சமாவது சரியாக இருக்கிறதா?

  • If the content has mistakes it has to be rectified.
    Nothing cannot be justified by abolishing something which brought to bring equality in education.

  • பா.ராகவனின் கொள்கை அதில் பிரதிபலிக்கிறது ! பிழைகள் களைய வேண்டும் என்ற நோக்கம் சரி .அதை வைத்துக் கொண்டு சமசீர்க் கல்வித் திட்டத்தையே களைய வேண்டுமென்ற நோக்கம் தவறு..
    சமுகம் இரு கூறாக பிளவு பட்டிருக்கிறது என்பதை கட்டுரையின் பின்னூட்டங்கள் உறுதிபடுத்துகின்றன

  • அன்புள்ள பாரா,

    நல்லவேளை, நான் டபுள் ப்ரமோஷன் வாங்கி சென்ற வருடமே பத்தாப்பு தாண்டிவிட்டேன், தப்பித்தேன்.

    நிற்க. ”தப்பெல்லாம் சொல்லக்கூடாது, விட்ருங்க, போனாப்போவுது, அதனாலென்ன” என்றெல்லாம் ஒரு சிலர் எழுதுவது இன்னும் சிரிப்பை வரவழைக்கிறது.

    அடுத்த டோஸுக்கு ரெடியாக இருக்கிறோம்!

  • இன்னும் அறிவியல் புத்தகத்தை படித்துப் பாருங்கள். ஷேக்ஸ்பியர் கொடுத்த “Comedy of Errors” என்கிற தலைப்பு எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது என்பது தெரியும். ரொம்ப வருத்தமாக இருக்கிறது. இது மாதிரியான ஒரு பாடப்புத்தகத்தை கொண்டுவருவதற்கு, ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு குழு, அதற்க்கு ஒரு குழுத்தலைவர், சில மேலாய்வாளர்கள், பல நூலாசிரியர்கள். இவை அனைத்திற்கும் மேல் proof-readers. இந்த தவறுகளுக்கு யாரை பொறுப்பாக்குவது.

    வலிமையான ஒரு தலைமுறையை உருவாக்குவதற்கான ஒரு முயற்ச்சியாக இது தெரியவில்லை. யாரையோ த்ரிப்திபடுதுவதர்க்கான ஒரு செயலாகவே தெரிகிறது. அதுவும் மக்கள் வரிப்பணத்தில்.

    “படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும்
    உடையான் அரசருள் ஏறு.”

    திருவள்ளுவர், தான், இதை எழுதும் போது, தற்போதய நிலைமை மாதிரி கூட சிலர் அர்த்தபடுத்திக்கொல்ள்ளகூடும் என்று நினைத்திருப்பாரா என்று தெரியவில்லை.

  • நீங்கள் சொல்கிற படி இவை பெரிய தவறுகள் தான். அதே நேரத்தில், “”காந்தி தீண்டாமையை எதிர்த்தார்… அதை அறவே வெறுத்தார் …. அரிஜன மக்கள் வாழ்வு உயர போராடினார் “”, என்ற வரலாற்று குப்பைகளை விட இவை திருத்திகொள்ள கூடியவைதான்.

    .

  • இங்கு பின்னூட்டமிட்டிருப்பவர்கள் முதலில் 10 ஆம் வகுப்பு தமிழ் மீடியம் புத்தகத்தை கண்ணாலாவது பார்த்திருக்கிறார்களா என்று தான் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது!

    நாங்கள் தான் கடந்த வருடத்தோடு முடிவடைந்த 10ம் வகுப்பு பாடத்திட்ட புத்தகங்களை படிக்க நேர்ந்த முதல் செட்! 2005ல்!

    ஏகப்பட்ட பிழைகள், கேவலமான மொழிபெயர்ப்புகள் என நாங்கள் சந்தித்த சிரமங்கள் ஏராளம்…அப்போதெல்லாம் இப்படி நோட்ஸ் போட்டு கரிசனம் காட்ட யார் வந்தீர்கள்?

    திடீரென அரசாங்கம் பாடப்புத்தகத்தின் பல பக்கங்களை அதிகப்படியான பாடத்திட்டம் என சொல்லி நீக்கினார்கள்…இடையிடையே நீக்கியதில் இன்னும் குளறுபடியாகி சவரம் செய்ய தெரியாதவன் கொத்தி வைத்த மண்டை மாதிரி புத்தகம் பல்லை இளித்தது..

    அரசாங்க பாடதிட்டத்தின் தமிழ் வழி புத்தகங்கள் ஆங்கில வழி புத்தகங்களிலிருந்து அப்பட்டமாக மொழிபெயர்க்கப்படுகின்றன.மொழிபெயர்ப்பாளர்கள் என்பவர்கள் இரு மொழிகளிலும் ஜாம்பவான்களாக இருக்க வேண்டியது அவசியம்!ஆனால் மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள் இரு மொழிகளிலும் ஆளுமை பெற்றிருப்பார் என உத்தரவாதம் கொடுக்க முடியாது! மேலும் உங்களது கிழக்கு பதிப்பகம் போல அரசாங்க புத்தகங்களை மீண்டும் மீண்டும் படித்து எடிட் செய்ய எடிட்டர்கள் இருக்கிறார்களா என எனக்கு தெரியவில்லை…அப்படியே இருந்தாலும் அவர்களின் நம்பகத்தன்மை இங்கு கேலிக்கூத்தாகிறது!

    சரி இப்போ இந்த கட்டுரை!

    //இதனால் அரசரை உருவாக்குபவர் எனப் போற்றபட்டார்.//

    அய்யா ! KING MAKERக்கு சரியான தமிழ்வார்த்தையை கண்டுபிடிச்சி தமிழ்படுத்தி புரிய வெச்சிடுங்க பாக்கலாம்!

    ///சுற்றுச்சூழல் அனைவருக்கும் சொந்தமானது. ஒவ்வொருவரின் தேவையை பூர்த்தி செய்யக்கூடியதே அன்றி ஒவ்வொரு மனிதனின் பேராசைகளை அல்ல. பெருகிவரும் பேராசை நம்மை மிகவும் கடினமான சூழலுக்கு வெவ்வேறு பிரச்சனைகளாக கொண்டு செல்கிறது.///

    அப்பட்டமாக தமிழ்படுத்தப்பட்டிருக்கும் இந்த பாராவை எடிட் செய்யாதது யார் தவறு? இதற்கு முந்தைய வருட புத்தகங்களை படிச்சிருக்கீங்களா? இல்லை பார்த்தாவது இருக்கீங்களா?

    //கி.பி. 1939 முதல் கி.பி. 1945 வரை நடைபெற்ற இரண்டாம் உலகப்போர், உலகளாவிய ஒரு பெரும் போராக கருதப்படுகிறது.//

    இதுவும் அப்பட்டமான தமிழாக்கம்..ஆங்கில பிரதியோடு ஒப்பிட்டு பாருங்க..ஆனால் இதில தப்பு இல்ல…பல வருஷமா தமிழ்நாட்டு பாடத்திட்டம் இப்படித்தானிருக்கு…இன்னிக்கு என்னமோ புதுசா பாட வந்துட்டீங்க

    //ஹிட்லர் ஜெர்மனியின் பெருமையை வெளிப்படுத்தினார். ஜெர்மானியர்கள் உலகின் மிக உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். நார்டிக் ஜெர்மானிய இனத்தினர் மிக உயர்ந்தவர்கள் என்றும், செமிடிக் யூதர்கள் மிகவும் தாழ்ந்தவர்கள் என்றும் கருதினார்.//

    ACHEIVEMENTS OF HITLER என்பதை சாதனைக்கு பதிலா ஹிட்லரின் முன்னேற்றங்கள்னு போட்டிருந்தா காறி துப்பியிருக்க மாட்டீங்க?

    //கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் எதிர்பார்த்த வண்ணம் உலக அமைதிக்கு ஏற்பட்ட பங்கமே முதல் உலகப்போர் என்று கருதப்படுகிறது.//

    ஆமா இதுக்கு என்ன இப்போ?

    //பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரே ஒரு நிலப்பகுதிதான் இருந்தது. இதைச் சுற்றி பெருங்கடல்கள் சூழ்ந்திருந்தன. இவ்வாறு இருந்த நிலப்பகுதிக்கு ‘பாஞ்சியா’ என்றும் அதைச் சுற்றியுள்ள நீர்ப் பகுதிக்கு ‘பாந்தலாசா’ என்றும் அழைக்கப்பட்டது. இவ்வாறு பரந்த நிலப்பகுதி இரு பகுதிகளாகப் பிரிந்தது.//

    இதில ஒருமை பன்மை பிரச்சினை தவிர வேறென்ன?

    //இராமகிருஷ்ண இயக்கம், இராமகிருஷ்ண பரமஹம்சரின் பெயரை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது. இது ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம். சுவாமி விவேகானந்தர் என்பவரால் 1897 ஆம் ஆண்டு மே 1ம் நாள் துவங்கப்பட்டது.//

    அய்யா வணக்கமுங்கோ! RAMAKRISHNA TRUST இதுல TRUST க்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் தவிர இன்னும் பொருத்தமான வார்த்தையை நீங்க சொல்லிவிட்டு இந்த பாயிண்டை சேர்த்திருக்கலாம்!

    //பன்னாட்டு நிறுவனங்கள் என்பது பல நாடுகளில் தங்களது தொழிற் நிறுவனங்களை தொடங்கி நடத்தி வரும் அமைப்புகளாகும்.//

    ஆமா இல்லேன்னு சொல்லுவீங்களா?

    //பொருட்கள் என்பது உற்பத்தி செய்யப்பட்ட கார்கள், இரு சக்கர வாகனங்கள், கப்பல்கள், இரயில் எஞ்சின்கள், பேனா, பென்சில், அரிசி, கோதுமை மற்றும் சமையல் எண்ணை போன்ற பொருட்களைக் குறிக்கும்.//

    MATERIALSன்னா பொருட்கள் தானே அய்யா? இதுல உங்களுக்கு என்ன பிரச்சினை??

    //இந்திய மொழிகளின் வளர்ச்சி இந்திய இலக்கியங்கள் உன்னத நிலையை அடைய உதவுகின்றன.//

    ஆமா பின்ன என்ன இத்தாலிய மொழி வளர்ச்சியா இந்திய இலக்கியங்களுக்கு உதவும்??

    // தமிழ்ப் பாடநூலை வாசித்து முடித்துவிட்டேன். அது இந்த சமூக அறிவியல் புத்தகத்தைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்த நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்டிருக்கிறது. //

    ஆஹா இதை விட காமெடியாக இருப்பதாக சொல்பவர் அதை முதலில் இங்கே சுட்டிகாட்டியிருக்கலாமே!

    உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சினை? சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள குளறுபடிகள் மறுக்க முடியாதது தான்…அதை எதிர்ப்பதற்கு மொழிப்பெயர்ப்பு பிழைகளை காரணம் காட்டுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?

  • இங்கே உள்ள பின்னூட்டங்களிலிருந்து ஒன்று தெரிகிறது…

    இவர்கள் தான் சமச்சீரழிவு திட்ட புத்தகங்களைத் தயாரித்தவர்களாக இருந்திருக்க வேண்டும்.

    அதிலே இருக்கிற மாதிரியே இங்கேயும் சொற்பிழை, பொருட்பிழை எல்லாம் எக்கச்சக்கமாக இருக்கிறதே!

  • புறக்கணிப்பே மேலானது: தினமணி – நடுப்பக்க கட்டுரை”
    <a href="http://epaper.dinamani.com/epaperimages/3152011/31052011-cni-mn-08/22629343.JPG&quot;

    ஓரு பெரிய புத்தகக் கடையில் வைக்கப்பட்டிருந்த சுவர் சித்திரத் தாள் ஒன்று என் கவனத்தை ஈர்த்தது. சிறுவர்கள் பலர் ஒரு மின்விசிறியில் தொங்கிக் கொண்டிருக்க அடியில் ஒரு வாசகம்: Let Schools not interfere in Education- Mark Twain.

    எங்கள் கற்றலில் பள்ளிகள் தலையிடாதிருக்கட்டும் என்று சொல்வதன் பொருள், நிறுவனமாக்கப்பட்ட பள்ளிகள் சொல்லித்தரும் கல்விக்கும், கற்றல் என்பதற்கும் நிறைய இடைவெளி இருக்கிறது என்பதுதான்.

    சொல்லித்தரும் பள்ளிகள் மீதே இத்தகைய கருத்து மாறுபாடு இருக்குமானால், பள்ளிகள் சிறுவர்களின் மெய்யான கற்றலுக்கு இடையூறாக இருக்கும் என்று கருத்து காணப்படும் என்றால், அரசியல் தலையீடு எத்தகைய மோசமானதாக இருக்கும் என்று நினைக்கவே கூச்சமாக இருக்கிறது.

    “நான் தொகுத்த பாடலை நீக்கிவிட்டாகிலும் புத்தகத்தை வெளியிடுங்கள்’ என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி சொல்கிறபோது, அடடா என்று அவரது பெருந்தன்மையை மெச்ச வேண்டும் என்றாலும், அவ்வாறு செய்யத் தோன்றவில்லை. “இந்தக் குழப்பங்களுக்குக் காரணமே நீங்கள்தானே’ என்ற கேள்விதான் மிஞ்சுகிறது.

    ரேஷன்கடை கைப்பையில் முதல்வர் படமும், உதயசூரியனும் அச்சிட்டுக் காட்டி பாராட்டுப்பெற விழையும் அமைச்சர்களும் அதிகாரிகளும், இந்த பாடப்புத்தகத்தில் அன்றைய முதல்வர் தொகுத்த பாடல் இடம்பெறுவதையும் காட்டியிருப்பார்கள். “”என்னைப் பற்றி வரலாறு சொல்லட்டும். வாத்தியார்கள் சொல்ல வேண்டாம்” என்று இந்தப் பாடலை அவர் அப்போதே நீக்கியிருந்தால், அவர் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர். அவர் பெருந்தன்மையை அனைவரும் கட்சி பேதமின்றி பாராட்டியிருப்பார்கள். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை.

    கருணாநிதி சிறந்த திரைக்கதை எழுதியவர் என்பதற்கு பராசக்தி ஒரு படமே காலகாலத்துக்கும் சாட்சியாக நிற்கும். அவரது மேடைப்பேச்சுக்கு, அண்ணா மறைவையொட்டி வானொலியில் நிகழ்த்திய கவியஞ்சலி காலகாலத்துக்கும் நிற்கும். தமிழகத்தின் அரசியல் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க முற்படும் எவரும் அவரது நெஞ்சுக்கு நீதியைப் புரட்டாமல் இருக்க முடியாது. வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தில் இருந்துகொண்டிருந்த போதிலும், இவ்வாறாக பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றுவிட வேண்டும் என்கிற சிறு அரசியல் ஆசை, சிறந்த எழுத்தாளருக்கு இருக்க வேண்டியதில்லை.

    படிக்கிற மாணவர்கள் மனதிலும் தனது பிம்பம் பதிய வேண்டும் என்கிற ஆசை, வாக்கு வங்கி உத்தியைத் தவிர வேறில்லை.

    இவ்வாறாக, பாடநூல்களில் அரசியல் சாயம் கலப்பது புதிதல்ல. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் எலிசபெத் ராணி புகழ் இடம்பெறவே செய்தது. சுதந்திரத்துக்குப் பிறகு பாடப் புத்தகங்களில் காந்தி, நேரு பேச்சுகள், கட்டுரைகள், தன்வரலாறு சில பகுதிகள் இடம்பெறச் செய்தனர். ஆனால், அவர்கள் யாருமே இவை இடம்பெற வேண்டும் என்று விரும்பியவர்கள் அல்லர். அதற்காக ஆசைப்பட்டவர்களும் அல்லர். பாடத்திட்டக் குழுவினரும் அவர்களை அரசியல்வாதிகளாகப் பார்க்கவில்லை. வெறும் தலைவர்களாகப் பார்த்தனர்.

    ஆனால், தமிழகக் கல்வித்துறையில் ஒரு சுமுகமான சூழல் 1967-க்குப் பிறகு மாறியது என்பது மறுக்க முடியாதது. தேவாரம், திருவாசகம் பின்னுக்குத் தள்ளப்பட்டன.

    கம்பராமாயணத்தில் சள்ளையான பகுதிகளைப் பாடமாக வைத்தார்கள். இராவண காவியம் சேர்க்கப்பட்டது. திரு.வி.க. பேச்சுகள் இருந்த இடத்தில் அண்ணாவின் மேடைப்பேச்சு கட்டுரையில் சேர்ந்தது. மெல்ல திராவிட இயக்கத் தலைவர்களின் கட்டுரைகள், கவிதைகள் ஒவ்வொரு மாற்றத்தின்போதும் சேர்ந்துகொண்டன. இவை தவறு அல்ல. காலமாற்றத்துக்கேற்ப மாற வேண்டும். ஆனால், இது இயல்பாக இல்லாமல் திணிப்பாக மாறியது.

    இவற்றுக்கெல்லாம் திமுக, அதிமுக தலைமை மட்டுமே காரணம் என்று சொல்லிவிடவும் முடியாது. பாடத்திட்டக் குழுவில் அந்தந்த ஆட்சியில் அவரவருடைய அடிவருடிகள் பலர் இக்குழுவில் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் துதிபாடி நன்றிக்கடன் செலுத்தவே தலைப்பட்டார்கள். எந்த வயது மாணவர்களுக்கான புத்தகம், இதில் எந்தக் கருத்து, மொழிநடை, கவிநயம் போதுமானது என்றெல்லாம் யோசிக்க அவர்களுக்கு நேரமில்லை.

    பாடத்திட்டக் குழுவில் தாங்கள் நியமிக்கப்பட்டதும், மாலையுடன் கட்சித் தலைமையைப் பார்க்க கிளம்பிவிடுகிற அளவுக்கு அரசியல் சாயமேறிய மூளைகள், எத்தகைய பாடத்திட்டத்தைப் பற்றிச் சிந்திக்கும்? பாடப் புத்தகத்திலும்கூட செம்மொழி மாநாட்டு இலச்சினை எதற்கு? நீராரும் கடலுடுத்த.. பாடலை தமிழ்த்தாய் வாழ்த்து என்று ஒரு பக்கமும், கலைஞர் கருணாநிதியின், செம்மொழியான தமிழ்மொழியாம்… பாடலைத் தமிழ்ச் செம்மொழி வாழ்த்து என்று இன்னொரு துணை வாழ்த்து என்றும் குறிப்பிடாமல் விட்டார்களே என்கிற அளவுக்குத்தான் பாடத்திட்டக் குழுவைப் பாராட்ட வேண்டியிருக்கிறது.

    இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிக கவனம் செலுத்துகிறாரா அல்லது அமைச்சர்களின் விசுவாசக் கோளாறா என்றும் தெரியவில்லை.

    அச்சிடப்பட்டதாலேயே அந்தப் பாடநூல்களை அனைத்து மாணவர்களும் படித்துவிடப் போவதும் இல்லை. ஆசிரியர்கள் வகுப்பில் நடத்தப் போவதும் இல்லை. ஒவ்வொரு பாடப்புத்தகத்திலும் கருப்பு அடித்து அல்லது கிழித்து தைக்கிற வேலையும் வேண்டியதில்லை.

    புத்தகத்தில் உள்ள அந்தப் பகுதிகள் விலக்கப்பட்டவை, அவற்றில் தேர்வுக்கான கேள்விகள் வராது என்ற ஒரு வரி ஆணை போதும். ஆசிரியர்கள் நடத்தாமல் இருக்க, மாணவர்கள் அதைப் படிக்காமல் இருக்க!

    முன்னாள் முதல்வர் கருணாநிதி அல்லது அவரது அமைச்சர்களின் ஆசையில் இடம்பெற்ற பகுதிகளை நீக்கிவிட்டு மீண்டும் புத்தகம் அச்சிடுவதற்காக மக்கள் பணத்தைச் செலவழிப்பதைக் காட்டிலும், அந்தப் பகுதிகளைப் புறக்கணிப்பதுதான் சரியான முடிவாக இருக்க முடியும்.

    மாற்றுப் புத்தகங்களை அச்சடித்தால் கருணாநிதி மெüனமாக வெற்றி பெற்றவராகிவிடுவார். அவர் எழுத்தைப் புறக்கணிப்பதன் மூலம் அதிமுக அரசு அதே வெற்றியைத் தனதாக்கிக்கொள்ள முடியும். ஓர் எழுத்தைப் புறக்கணிப்பது எந்த எழுத்தாளனுக்கும் மிக அதிகமான தண்டனைதான். அந்த வாய்ப்பை விடுத்து, மீண்டும் புதிதாக அச்சிடுவது- மக்கள் பணம் வீணாவது மக்களுக்கான தண்டனையாக மாறிவிடும்.

  • சம சீர் கல்வி எனபது uniform போல.அதனால் நன்மைகள் பல உண்டு.அரசாங்கம் பத்தாவது மதிப்பெண்ணும் கல்லூரி சேர்வதற்கு எடுத்து கொள்ளப்படும் என்று அறிவிப்பு வெளியிடட்டும்.அப்போது பார்க்கலாம் எவ்வளவு matriculation /ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் தனி பாடத்திட்டத்தை தொடர்வதை.நேர்முக தேர்வை எடுத்து விட்ட அரசாங்கம் பொது தேர்வான பத்தாவது தேர்வு மதிப்பெண்களும் மருத்துவம்,பொறியியல்,சட்ட கல்லூரிகளில் சேர்வதற்கு எடுத்து கொள்ளப்படும் என்று அறிவித்தால் தன்னால் எல்லா பள்ளிகளும் மாநில வழி பாட திட்டத்திற்கு மாறி விடும்.+2 பாடம் அணைத்து பள்ளிகளிலும் ஒன்று தானே.அங்கே ஏன் அவர்கள் தனி தனி புத்தகங்கள் /போர்டு வைத்து கொள்ளவில்லை.

  • Ur title to this post is misleading. As some commenters have observed here, u r writing here about the books with சொற்பிழை, பொருட்பிழை, இலக்கணப் பிழைகள், சொற்றொடர் அமைப்புச் சிக்கல்கள் .

    How does it gell with the topic ?

    Further, on சொற்பிழை, பொருட்பிழை, இலக்கணப் பிழைகள், சொற்றொடர் அமைப்புச் சிக்கல்கள் also, there is some lack of clarity in ur post.

    What is wrong with the last example?

    இந்திய மொழிகளின் வளர்ச்சி இந்திய இலக்கியங்கள் உன்னத நிலையை அடைய உதவுகின்றன.

    The above statement is commonly held view. If the regional languages are encouraged to develop and flourish, the literature wrtten in them will also flourish

    What s wrong with the content as well as the way it is put in Tamil here? I wonder.

    Do u want to say: இந்திய மொழிகளின் வளர்ச்சி இந்திய இலக்கியங்கள் உன்னத நிலையை அடைய உதவுகின்றது.

    That is, the உதவுகின்றது is the appropirate ending to the singular noun வளர்ச்சி. Do u find fault with the plural இந்திய இலக்கியங்கள்? It refers to all reigional languages of India.

    U may b reading blogs among whom we have some Tamil teachers. On asking them how to write a partiuclar name, they gave diff answers to me. One famous Pondichery Prof of Tamil does not know the Tamil word for கூண்டுச்சிறை when he wrote his travelogue on Andaman tour in his blog. He wrote:செல்லுலர் ஜெயில். One Tamil prof who taught Tamil for about 30 years writes faulty Tamil and defends it by any means with me.

    Reading Tamil dailies, u will find no one cares for singluar and plural endings. வண்டிகள் இங்கே நிற்காது. This is their Tamil. They defend themselves: If we write வண்டிகள் இங்கே நிற்கா, we sound pretentious. Just as Keeraa told u that we must give people what they can understand.

    I hav upteen comments on many entries here. Suffice to restrict myself to one now.

    Generally we dont have competent translators. Text books may have been written in English for that medium students; and then translated into Tamil by incompetent hands.

    The translation is not to blame; but the quality of appreciation of English language among Tamilians today that is to blame. It is generally found acorss Tamil society. It has nothing to do with the samacheer kalvi (what is the translation Sir?).

    Long post. Sorry. Now I am going to ur comments in ur other on the vexatious samacheer kalvi.

    I dont know anything about the new and old edu systems. Let me know from u.

  • JO.AMALAN please explain the below line from you first:
    “Now I am going to ur comments in ur other on the vexatious samacheer kalvi.”

  • Hi Paa. Raaghavan,Jeymohan, Cho, Jeya and co, I studied my schooling in a government high school in Tamil Medium and have been working in IT Industry for the past 15 years. I haven’t seen any issues with level of education I was provided with in state government curriculam aeven in 80’s. I went through the text books of Samacheer Kalvi in the tamilnadu text bok site and found it is very good. Also, I went through the CBSE books and found unnecessary complex for kid mind which is not approprite to teach kind on verious aspects. CBSE system squeezes kid/s mind & brind unecessary. It is time to go for ‘Samacheer Kalavi’ and the proof or language mistake you have pointed out or not big issues which can be alwayys corrected(still I have go through the sciences and maths subhects).

    Please keep yourselves away from the politics in school education and do it in the political with ground with Drividian movement/parties.

    – Naa Selvakumar

  • பாடத்திட்டத்தை விட, கற்றலில் (கற்பித்தலில்) கவனத்தைச் செலுத்தவேண்டும்.. பாடத்திட்டமும் சரியில்லை.. கற்றலும் குறைபாடுடையது என்றால்?

  • Hi Naa Selvakumar,

    Why do you keep yourself as a scale? It’s preposterous. Just because you have been working in IT industry it doesn’t mean that you are well educated. They are not doing any rocket science in IT industry. Actually 99% of IT companies in India do servicing/maintenance. They have not created a single significant product. None of the Indian IT companies have contributed anything to any open source projects.

    The article clearly points out so many ridiculous mistakes in the book. That these mistakes are typos (actually few of them are embarrassing grammar/subject matter mistakes) and could be corrected, is not the point. The point is the authors of these books are MORONS. MORONS. And if the guys who write the books are MORONS, what do you expect of the guys who teach children using this book? What will the children then become of?

    And, you are okay with this kind of books, education – fine, that is your choice. Go read it and remain a mediocre. Who are you to tell that this crap is good enough for All? And you seem to think like you have done some big achievement, by having worked in IT industry for 15 years. What did you do in IT industry?? Did you create any new product? Did you invent any new algorithms?

    -karthik

  • கார்த்திக்,
    நமக்கு தெரிந்த Rocket Scientistகளான திரு.அப்துல் கலாமும், திரு.மயில்சாமி அண்ணாதுரையும் தமிழக அரசு பாடத்திட்டதில் படித்தவர்கள்தாம். மெட்ரிக்கில் படித்தவர்கள் மேதாவிகள் என்றும் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் அறிவு குறைந்தவர்கள் என்றும் நினைப்பது அறிவீனம். இரண்டு திட்டங்களுமே மாணவர்களை ஈர்க்கும் விதமாய் (Activity based-1ம் வகுப்பு சமச்சீர் பாடத்திட்டத்தில் இதை காணமுடிகிறது) அமைத்தால் நல்லது.
    நானும் செல்வகுமார் போல தமிழ் வழியில் படித்தவன்தான்; இப்போது என் குழந்தைகளின் Matric மற்றும் சமச்சீர் கல்வி புத்தகங்களையும் ஒப்பு நோக்கும் வாய்ப்பு பெற்று, சமச்சீர் கல்வி மாணவர்களின் பங்கேற்புடனான கற்பித்தல் முறை என்றும் மற்றது ஆசிரியர்கள் Black Boardக்கு கற்பிக்கும் முறை என்றும் காண்கிறேன்.
    கிராமப்புற முதல் தலைமுறை பள்ளி செல்லும் குழந்தைகளுடன் இரண்டாண்டுகள் பழகிய என் அனுபவத்தில் இக்கல்வி திட்டம் அவர்களிடையே கல்வியின் மீதான பயத்தை போக்கி, ஆர்வத்தை வரவழைக்கும் என்றே தோன்றுகிறது.
    பா.ரா குறிப்பிட்டுள்ள பிழைகள் கண்டிப்பாக களையவேண்டியவை; இவற்றுள் சில ஆசிரியர்களின் பிழையாகவும்(King Maker), சில அச்சுக் கோப்பவர் / பிழை திருத்துபவரின் கவனக்குறைவாகவும் இருக்கலாம். கடந்த வருட புத்தகங்களிலும் இத்தகைய பிழைகள் இருந்திருந்திருக்கலாம் (என் பள்ளி நாட்களிலும் கணக்கு புத்தகங்களில் விடைகள் தவறி இருந்ததாக நினைவு). பிழைகளுக்காக பாடதிட்டத்தையே கைவிடவேண்டியதில்லை; திருத்தலாம்…

  • Mr P.Rajendra Prasad, Selvakumar,
    It is my observation that the entire educational system in Tamil Nadu is based on rote learning and the CBSE & ICSE boards are very clear that thinking is more important than memorizing facts. Of course one need not memorize if one were to learn in ones own language, but then the questions that are asked are only of descriptive nature and does not test the real ‘understanding’ of the learner and hence has nothing to do with mediums (Hon.Ex.President is from an era of understanding stuff than stating facts, and so it is a bad example for current state of affairs). This is a disease that continues all the way up to even Engineering courses. The fact that the entrance examinations for Professional courses were scrapped on the pretext of ‘equality’ is another supporting point that people and students in general are afraid of facing questions that will test the understanding and not ask them to merely state facts. Also the obsession in parents in sending their kids to the so called Mental Math stuff like ‘Abacus’ is another cancer. It is high time that people are sensitized on this disease of rote learning and accept the fact that systems like CBSE have a better way of doing things. ( The days of real mental math of calculating fractions, doing mental geometry have gone and we need to remember that once we were doing alright)

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி