மனித மனம் எண்ணிப் பார்த்திராத காரியங்களை எதிர்பாராத கணங்களில் அது ஒரு நட்சத்திரம் புதிதாக தென்படுவது போல நிகழ்த்தத் தொடங்கி விடுகிறது.
கீதையைப் படித்துப் புரிந்து கொண்ட பிறகு சாகிறவனின் பிணம் கூட மணக்கும்.
தமிழ் உரையாடல்களில் ”ஜி” சேர்ப்பு பெண்கள் நைட்டிக்கு மேல் துண்டு போட்டுக் கொண்டு பலசரக்கு வாங்கப் போவது போல.
குழம்பித் தெளிவதை விட கும்பிட்டுத் தெளிவது சுலபம்.
சாகசங்கள் திட்டமிட்டு செய்யப்படுவதில்லை. (கபடவேடதாரியில் வரும் சாகசங்களை நினைவு கொண்டால் இந்த வாக்கியம் இன்னும் பொருள்படும்).
மலினப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுக்கு என்றைக்கும் மகத்துவம் நிலைத்திருக்கும்.
மனிதம்! எத்தனை மகத்தான பண்டம்.
அவனோடு நானல்ல; அவனே வாழத் தகுதியற்றவன்.
வாழ்க்கை மனம் மட்டும் சார்ந்ததாக இருப்பதில்லை.
வாசித்துக் கடக்கையில் நம்மை நிறித்தி வைக்கும் இந்த வரிகள் அத்தியாய அற்புதத்துக்கு போதுமானது. ஆனால், சுவராசியம் வேண்டுமல்லவா?
பதினாறாம் நரகேசரி யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது, நீங்கள் நினைக்கும் அளவுக்கெல்லாம் நான் ஒர்த் இல்லை என்பதை கோவிந்தசாமி சொல்லாமல் சொல்லி இருக்கிறான். கீதையை வாசித்து அதன் ஆதி மூலம் காண்பதெல்லாம் கஷ்டம் தான் போல! கீதையை வாசிக்க விரும்பி அத்தியாயங்களை நகர்த்த முடியாமல் புத்தகத்தோடு இருப்பவர்களுக்கு பா.ரா. கோவிந்தசாமி மூலமாக ஒரு வழி சொல்லி இருக்கிறார்.
தனக்குள் தோன்றிய நான் வேறு; மனம் வேறா? என்ற யோசனையை கொஞ்சம் நீட்டியிருந்தால் கோவிந்தசாமிக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கக் கூடும். அதைச் செய்யாமல் சாகரிகாவுக்கு எதிராக இரு கதாபாத்திரங்களை இறக்கிவிட்டதாக கோவிந்தசாமி பெருமை கொண்டிருந்த நிலையில் அவனுடைய ஏகாந்தத்தை நினைத்து புன்னகைத்துக் கொள்ளும் சூனியன் தான் சிருஷ்டிக்க இருக்கும் பேருலகம் குறித்து சிலாகிக்க ஆரம்பிக்கிறான். பிரமாண்டமாகத் தான் இருக்கிறது அவன் உலகம்!
சாகரிகாவுக்கான அடுத்த அஸ்திரத்தை அவளின் கருக்கலைப்பு, கருவுக்கான காரணம் என செம்மொழிப்ரியா பதிவு வழியாக சூனியன் எய்கிறான். சாகரிகாவுக்கான எதிர்ப்பு வட்டமும், செம்மொழிப்ரியாவுக்கான ஆதரவு வட்டமும் வெண்பலகையில் கொஞ்சம், கொஞ்சமாய் விரிந்து கொண்டே செல்கிறது.
அழகான பெண்களுக்கு வழக்கமாக முகநூலில் நிகழும் அற்புதம் வெண்பலகையில் செம்மொழிப்ரியாவுக்கும் நிகழ்கிறது. அத்தியாய திரை இறங்குகிறது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.