சூனியன் வெண்பலகையில் கொழுத்திப் போட்ட நெருப்புப் பொறி படர ஆரம்பிக்கிறது. நீலநகர வாசிகள் அந்த பொறி பதிவு குறித்து விவாதிக்க ஆரம்பிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதில் சொல்லி அழுத்துப் போன சாகரிகா வெண்பலகையிலும் தன்னிலை விளக்கம் தருகிறாள். சமீபத்தில் ஒரு பிரபல கவிஞருக்கு தர இருந்த விருது சார்ந்து அவருடைய கடந்தகால செயல்பாடுகள் குறித்து முகநூலில் நடந்த விவாத சாயல்கள் வெண்பலகையில் சாகரிகாவுக்கு நடக்கிறது! நீலநகரத்தின் கலாசாரத்துறை செயலாளர் அறிவுறுத்தும் அளவுக்கு நிலைமை முற்றி விடுகிறது.
செம்மொழிப்ரியாவாக வந்து பிள்ளையார் சுழி போட்ட பதிவின் தொடர்ச்சி இம்முறை பதினாறாம் நரகேசரி வடிவில் சாகரிகாவுக்கு அடுத்த அஸ்திரமாய் வந்து நிற்கிறது. அவன் எழுதிய பதிவு நீலநகரத்தில் அவள் வசிப்பதையே கேள்விக்குறியாக்கி விடும்படியாக அமைகிறது.
தன் தோழி ஷில்பா மூலமாக கோவிந்தசாமி நீலநகர பிரஜையாகி இருப்பது, அவனுடைய நிழல், அது வெண்பலகையில் பதிவு எழுதுவது, நிழலின் எண்ணம் ஆகியவைகள் குறித்து சாகரிகாவுக்கு தெரிந்து கொள்கிறாள். இதையெல்லாம் கேட்டு மயங்கி சரிந்த சாகரிகா விழித்ததும் என்ன செய்யப் போகிறாள்?
பதினாறாம் நரகேசரி யாராக இருக்கக் கூடும்? பதிவை வைத்து பார்த்தால் சூனியனாக இருக்கலாம் என தோன்றுகிறது. அதை மட்டும் வைத்துக் கொண்டு முடிவு செய்ய இயலாது என்ற லாஜிக்கை வைத்து பார்த்தால் கோவிந்தசாமியாக இருப்பானோ? என்ற சந்தேகமும் வருகிறது. சாகரிகாவுக்கு நேர் எதிரே நிற்கும் அஸ்திரங்களை முறியடிக்க ஷில்பா உதவுவாளா? என்ற இரு கேள்விகளுக்கான விடைகள் அடுத்த அத்தியாயத்தில் கிடைக்கக் கூடும்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.