தொழில்நுட்ப யுகத்தில் மனிதன் மூன்று மிகப்பெரிய மாயைகளில் தவறாமல் விழுகிறான்.
1. அன்லிமிடெட் டாக் டைம்
2. அன்லிமிடெட் டேட்டா
3. 1டிபி க்ளவுட் ஸ்டோரேஜ்
நாம் பேசிக்கொண்டே இருப்பதில்லை. நாம் படம் பார்த்துக்கொண்டே இருப்பதில்லை. நாமே ஏறி உட்கார்ந்தாலும் 1 டிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் நிரம்பாது.
அறிவு உணரும் இந்த உண்மையை நடைமுறைப்படுத்தும்போது தயக்கம் வந்துவிடுகிறது. தவறாமல் தவறு செய்துவிடுகிறோம்.
மிகவும் கறாராக சுய பரிசோதனை செய்துகொண்டு பின் வரும் முடிவுக்கு வந்திருக்கிறேன். எனக்கு,
1. ஐந்து மணி நேர டாக் டைம் போதும்
2. அறுபது ஜிபி டேட்டா போதும்
3. நூறு ஜிபி க்ளவுட் ஸ்டோரேஜ் போதும்
இதற்குள் வெட்டி முறிக்க முடிந்ததை சரியாகச் செய்தாலே எப்போதும் போதும்.