நீல நகரத்தில் எல்லாவிதமான அபத்தங்களும் உண்டு. அவை வெறும் அபத்தங்கள் அல்ல. பகுத்து அறியும் தகுதி கொண்ட மூளையும் தர்க்கபூர்வமாக சிந்திக்கத் தெரிந்த மனமும் வாய்த்த போதிலும் கூட அவை இரண்டையும் சோம்பேறித்தனத்தாலும் அல்லது அலட்சியத்தாலும் மழுங்கடித்து விட்டு மேலெழுந்தவாரியாக கும்பலோடு கோவிந்தா என்று உளறிக் கொட்டும் நீல நகரவாசிகளை இதை விடச் சிறப்பாக விவரித்து விட முடியாது.
பெண்கள் சார்ந்த நையாண்டிகள் போதும் சார். கொஞ்சம் ஆண்கள் செய்கின்ற அபத்தங்களையும் எழுதுங்களேன்? அப்புறம் இன்னும் ஒரு விஷயம். சூனியர்கள் உலகத்தில் அவர்களுக்கு பெயர் இல்லாமல் இருக்கலாம். நீல நகரத்தில் இலக்கங்களையாவது கொடுத்து விடுங்கள் சார். ஒரு அடையாள வசதிக்காக மட்டும். இன்னும் பல சூனியர்கள் வருவார்கள் போலிருக்கிறதே?
ஆனால் ஒரு விஷயம் புரியவில்லை. குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டும் தான் நீல நகரத்தின் மொழி புரியும். அதன் மூலம் தொடர்பாடமுடியும். அப்படி இருக்கையில் சுற்றுலா விசாவில் இருக்கின்றார் சிரிப்பால் எப்படி வெண் பலகையில் சாகரிகா எழுதுவதைப் படிக்க முடிந்தது?
பாவம் கோவிந்தசாமியின் நிழல் செய்த தவறுக்கு அவனுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ?