கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 18)

சாகரிகாவின் மூளைக்குள் பா.ரா.! அவரின் நிறைய புத்தகங்களைப் படித்திருப்பாளோ என்று நினைத்தேன். இல்லை. இது வேறு என்று புரிகிறது.
அப்போ பா.ரா.வும் சூனியனும் ஒரே ஆள் அல்ல. Confirm.
இன்று காலை தற்சார்பு பொருளாதாரம் பற்றி ஒரு கிரீஸ் டப்பாவின் பதிவினை முகநூலில் படிக்க நேர்ந்தது. அதில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள். இங்கும் அப்படித்தான் பா.ரா. குறிப்பிடுகிறார். “எனக்கு ஒற்றுப் பிழை இல்லாமல் எழுத வராது. – அதுதான் தமிழ் தேசியத்தின் அடிப்படை தகுதி”
திராவிடம் குறித்து தமிழ்க் குடிமகன் கூறுவதாய் இப்படியொரு பத்தி வருகிறது. “திராவிடம் என்பது ஒரு சித்தாந்தமல்ல. அது ஓர் உணர்வு. சித்தாந்தங்கள் சிதறடிக்கப்படலாம். உணர்ச்சி ஒருபோதும் அழியாது.” – அருமை. 👌
கதை இப்போது பா.ரா.விற்கும் சூனியனுக்கும் இடையேயானதாக மாறியிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். யார் கை ஓங்குகிறது என.
Share