தினமலர் பத்தி எழுதத் தொடங்கியது முதல் தினசரி இருபது முப்பது மின்னஞ்சல்களாவது போற்றியும் தூற்றியும் வருகின்றன.
நானும் பார்க்கிறேன், எழுதுகிற இத்தனை பேரில் ஒருவராவது ஜெயமோகனுக்கு எழுதுவதுபோல அறிவுஜீவித்தனமாக எழுதுவாரா என்று. ம்ஹும். கல்கி, குமுதம் காலத்தில் வாசிக்கக் கிடைத்த அரவக்குறிச்சிப்பட்டி அசோக்ராஜா, அரகண்டநல்லூர் விஜி, அய்யாறு வாசுதேவன் வகையறாக் கடிதங்கள்தாம் எல்லாமே.
திட்டுகிறவர்கள்கூட இலக்கியத் தரமாகத் திட்டமாட்டேனென்கிறார்கள். டேய் பாப்பாரக் கூமுட்டை என்று தொடங்கும்போது மட்டும் இலக்கிய வாசனை காட்டிவிட்டு, அடுத்த வரியிலேயே காலம் பதில் சொல்லும் என்று முடித்துவிடுகிறார்கள்.
இதெல்லாம் இப்படியே போனால் என்றைக்கு நான் எனக்கு வரும் மின்னஞ்சல்களையெல்லாம் இணையத்தில் ஏற்றுவது? இந்த ஜென்மத்தில் அந்த பாக்கியம் இல்லை போலிருக்கிறது.