சேகரைச் சாகடிக்கும் கலை

நெடுந்தொடருலகில் கதாசிரியன் பாடு சற்று பேஜாரானது. சும்மா ஒரு ஜாலிக்கு அவனைப் போட்டு வாங்க நினைப்பவர்கள் மாதாந்திரக் கதோற்சவத்தில் சில மந்திரப் பிரயோகங்கள் செய்வர். அவையாவன:-

1. செகண்டாஃப் கொஞ்சம் lag சார்.
2. சீன் ரிப்பீட் ஆகுது சார்.
3. ஸ்கிரீன் ப்ளே ஓகே, ஆனா சீன் ப்ளே சரியில்ல.
4. இதே சீன் பன்னெண்டர சீரியல்ல நேத்துதான் டெலிகாஸ்ட் ஆச்சு.
5. எமோஷன் கம்மியா இருக்கு சார்
6. பேசிட்டே இருக்காங்க. ஆக்‌ஷன் பத்தல.
7. கதை ஹீரோயின்மேல போகல சார்.
8. கதையா கேக்குறப்ப ஓக்கே, ஆனா டெலிகாஸ்டுல இடிக்குது சார்.
9. சீன்ஸ் நல்லாருக்கு; ஆனா கதை மூவ் ஆகல சார்.
10. சைட் டிராக் ஸ்டோரி ஒட்டல சார்.
11. இந்த லைன் இப்பத்தான் சார் —-ல வந்து முடிஞ்சிது.
12. டீடெயில் பத்தல.
13. பட்ஜெட் கட்டாது சார்
14. ஷிப்டிங் நெறைய கேக்கும்.
15. சீனெல்லாம் நல்லாருக்கு. ஆனா டயலாக் வர்ஷன் சரியா இல்ல.
16. ஜூனியர் ஆர்டிஸ்ட் நெறைய வராங்க. அந்த சீனெல்லாம் பெரிசா வேற இருக்கு.
17. ஆடிக்கு ஒரு நாள் சீன் வந்தா ஆர்ட்டிஸ்ட் எப்படி டேட் தருவாங்க?
18. ஆஸ்பிடல் நிறைய வருது சார். ஆடியன்ஸ் உக்காரமாட்டாங்க.
19. இதெல்லாம் கேக்க நல்லாருக்கும்; நம்பர் வராது
20. டிராக்ஸ் தனியா கேக்க நல்லாருக்கு. ஆனா ஒண்ணோட ஒண்ணு ஒட்டமாட்டேங்கு.
21. எமோஷன் சஸ்டெயின் ஆகமாட்டேங்குது
22. ஒரு டிராக் புடிச்சா பத்து எபிசோடுக்காவது நிக்கணும். இதுல டக்கு டக்குனு கட்டாயிடுது சார்.
23. யூனிட் இல்லாம பண்ண மூணு நாளைக்காச்சும் சீன் வேணும் சார்
24. நாப்பது நாப்பதா குடுத்திங்கனா ஷெட்யூல் போட முடியாது சார். நூறு சீன் பல்க்கா குடுங்க.
25. செகண்டாஃப் நீங்க கரெக்ட் பண்ணிருவிங்க; தெரியும். ஃபர்ஸ்டாஃப் கொஞ்சம் பாத்துக்கிடுங்க.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter