கோவிந்தசாமியின் நிழல் கோபித்துக் கொண்டு அவனை விட்டு பிரிந்ததை விடவும் தனது கவிதையை அது மொக்கை என்று கூறியது தான் அவனுக்கு பெரும் அவமானமாகிப் போகிறது.
காதலர் தினத்திற்கு எப்போதும் போல் அவன் சார்ந்த கட்சியின் வடக்கத்தி தலைவர் ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்க அது குறித்து அவன் ஒரு கவிதை எழுத முனைவதே இந்த அத்தியாயம். இடையில் கிருஷ்ணனை ஒரு காட்டு காட்டி விடுகிறார் பா.ரா. இவருக்கு ஏன் கிருஷ்ணனின் மீது இப்படியொரு காண்டு. கேட்க வேண்டும்.
நாத்திகர்கள் நான்கு வகையென்று குறிப்பிடுகிறார். புதுத் தகவல். ஆனால் இதுவெல்லாம் உண்மைதானா? முதலில் இதில் நாம் எவ்வகையென்று ஆராய வேண்டும்.
இதழ்களில், வாசகர் கடிதம் என்று இருக்கும் பகுதி உண்மையில் வாசகர்கள் அனுப்புவது தானா என்று எனக்கு பல தருணங்களில் ஐயம் எழும். அதுவும் குறிப்பாய் தினமலரில் வாசகர் பகுதியை படிக்கையில். இந்த அத்தியாயத்தில் அது தெளிவாகி விட்டது.
விட்டுச் சென்ற நிழலும், சூனியனும் என்னவானார்கள்? அடுத்த அத்தியாயத்திற்கு செல்வோம்….
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.