நீலநகரத்தின் நியதிகள் அனைத்தும் புதுமையாகவே இருக்கின்றன. அவையனைத்திலும் எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்களின் புதுமைச்சிந்தனை இழையோடியுள்ளது.
நீல நகரத்தில் ரகசியங்களே இல்லை என்பதும் அங்கு நிலவும் மொழியைக் கற்றுக்கொள்ள ஒரு நிமிடமே ஆகும் என்பதும் வியப்புக்குரியதாக உள்ளன. ஒவ்வொருவரும் தங்களின் கருத்தை எழுதியே தெரிவிப்பதும் வெண்ணிறப்பலகையில் எழுதும் அனைத்தும் ஊருக்கே தெரியும் என்பதும்
அருமையான
சிந்தனை.
சூனியன் நீலநகரத்தின் மொழியை அறிந்துகொள்வதற்காக அவன் இழப்பதும் கோவிந்தசாமியின் நிழல் தன் மனைவியால் புறக்கணிக்கப்பட்டுத் தெருவில் கிடப்பதும் துன்பியல்தான்.
அதிபுனைவுக் கதைக்குரிய அனைத்துக் கூறுகளும் இந்தக் கபடவேடதாரியில் இருக்கிறது. அதனால்தான் வாசகரால் இந்த நாவலைத் தங்கு தடையின்றி, படித்து முன்செல்ல இயலுகிறது.
இந்த நாவல் இனிவருங்காலத்தில் மிக முக்கியமான அதிபுனைவுக் கதையாகக் கருதப்படும் என்பதில் ஐயமில்லை.