கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 6)

நீல நகரத்தின் வர்ணனை மிக அருமை. வழக்கமான மிகுபுனைவு கதைகளில் இந்த உலகில் உள்ளனவற்றுக்குத் தலைகீழாகவே பிறிதொரு உலகம் இருக்கும் என்றுதான் காட்டப்பட்டிருக்கும்.
ஆனால், எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்களின் மிகுபுனைவு கதையான இதில் இந்த உலகில் உள்ளனவற்றுக்குப் புதுமையானவை மட்டுமே பிறிதொரு உலகமான நீல நகரம் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.
சான்று – பின்தலையில் ஒற்றைக்கண். குளிர்க்கண்ணாடி அணிந்து அதை மறைத்திருப்பார்கள். உடலுக்கு உடையணியும் விதம்.
இந்தக் கதையில் சூனியனுக்கு இணையானதாகவே கோவிந்தசாமியின் கதைமாந்தர் படைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. அறிவுக்கும் அறிவின்மைக்குமான முரண்களாகவே நாம் சூனியனையும் கோவிந்தசாமியையும் கருதமுடிகிறது.
நமக்குள்ளும் சில நேரங்களில் கோவிந்தசாமி இருப்பதைக் காணமுடிகிறது. நாம் நமக்குள் இருக்கும் கோவிந்தசாமியைச் சூனியனாக மாற்ற முயன்றுகொண்டே இருக்கிறோம். ஆனாலும் நமக்குள் கோவிந்தசாமியை நம்மால் முற்றிலுமாக மாற்றிவிட முடிவதில்லை.
இந்தக் ‘கபடவேடதாரி’ நம்மை நாமே உளவியல் அடிப்படையில் சுயபரிசோதனை செய்துகொள்ள உதவும்.
Share
By Para

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me