அருட்செல்வப் பேரரசன் வால்மிகி ராமாயணத்தை மொழியாக்கம் செய்யத் தொடங்கியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அவரது முழு மகாபாரதம் (கிஸாரி மோகன் கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழ்) ஒன்றுதான் இணையத்தில் நான் முழுதாக வாசித்த ஒரே தொடர். எளிய, நேர்த்தியான, சமகாலத் தமிழைத்தான் அவர் மொழிபெயர்ப்புக்குப் பயன்படுத்துகிறார். எங்குமே உறுத்தல் இல்லாமல் வாசிக்க முடியும்.
நான்கு அத்தியாயங்களை ஒரே அமர்வில் வாசித்துப் பாருங்கள். அவர் செய்வது எவ்வளவு பெரும் செயல் என்பது புரியும்.
ஒரு விஷயம். இதிகாச வாசிப்பு என்பது பொழுது போக்கல்ல. அது ஒரு பணி. தினமும் அதற்கென நேரம் ஒதுக்கி, கவனமாகச் செய்ய வேண்டியது. இதை மட்டும் நினைவில் கொண்டுவிட்டால் போதும். வேறொரு யுகத்தில் வாழ்ந்துவிட்டு வரலாம்.
அருட்செல்வப் பேரரசனின் வால்மிகி ராமாயண மொழிபெயர்ப்புப் பக்கத்தின் லிங்க் இங்கே உள்ளது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
நான் வாசிக்கிறேன். பாடல்கைளை புரிந்துகொள்ளுவது சிரமம்..விளக்கமாக எழுதுகிறார்… + தங்களின் கதைகள் அருமை..எதேச்சையாக கவனித்ேதன்.. 2008 முதல் பதிவுகள் இருக்கிறது.. தினம் கொஞ்சம் கொஞ்சமாக படிக்கனும்..கபட வேட தாரி ையைஇன்னும் ெதாடல ,.ெதாடனும் நன்றி.