சூனியனின் தண்டனைக்கான ஃப்ளாஷ் பேக் ரொம்பவும் எளிமையாக முடிந்து விட்டது. இன்னும் பிரமாண்டமாக இன்னொரு உலகத்தை எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
அந்த அரசி அந்த வைபவத்துக்கு விஜயம் செய்ததும் அதன்பின்னர் அப்போது அங்கே நடந்த சம்பவங்களும் நாம் அறிந்தவைதான்.
எனக்கு இப்போது ஓரளவு புரிகிறது. நீலநகரம் என்பது வேறொன்றுமில்லை. நாம் தினமும் புழங்கும் முகநூல் தான். இங்கேதான் ஒருவரது பதிவுகளை அனைவரும் பார்க்க முடியும்.
கோவிந்தசாமியின் நிழல் என்பது அவனது ஃபேக் ஐடி. அவனுடைய உண்மையான ஐடியில் சென்றால் அவனை அவள் ப்ளாக் செய்து விடுவாள் என்பதால் சூனியன் அவளை ஃபேக் ஐடியில் அழைத்து செல்கிறான். இந்தக் கதைக்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு ஃபேக் ஐடி என்பதை நினைவில் கொள்க.
நமது ஐடியை விட நமது ஃபேக் ஐடியில் இயங்கும் போது உள்ள சுதந்திரத்தால் நாம் அந்த ஐடியில் மிகவும் புத்திசாலித்தனமாக தெரிவோம். அதுதான் கோவிந்தசாமியின் நிழல் அவனைவிட புத்திசாலித்தனமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
நகரத்தின் குடியுரிமை என்பது நம்மை ரெஜிஸ்டர் செய்து கொள்வதுதான். இந்த உலகத்தில் நுழைந்ததும் ஆண்களும் பெண்களும் மொத்தமாக மாறிவிடுவது நாம் அறிந்ததே.
இன்னும் பல நுட்பமான விஷயங்கள் என் அனுமானத்தை உறுதிபடுத்தினாலும் ஆசிரியர் மூலமாக உறுதிபடுத்திக் கொள்ள இன்னும் சில அத்தியாயங்கள் காத்திருக்க வேண்டும்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.