அனுபவம்

கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 7)

கோவிந்தசாமி என்னதான் சாகரிகாவை ஆத்மார்த்தமாகக் காதலித்தாலும், சாகரிகாவைப் பொருத்தவரை கோவிந்தசாமி ஒரு மூடன் அவர்களின் காதல் வெறும் குப்பை. இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது- பெண்கள் ஒன்றை வேண்டாமென்று வெறுத்து விட்டார்களென்றால் அவர்களுக்கு அது வேண்டாம்.
அது ஓர் இரகசியமற்ற நகரம். இரகசியமற்ற மக்கள் வாழுமிடம். அங்கு எவர் வீட்டில் என்ன நடந்தாலும் அதனை வெண்பலகையில் எழுதிவிட வேண்டும். அதை மற்றவர்கள் வாசித்துத் தெரிந்து கொள்வார்கள். கிட்டத்தட்ட முகநூல் போலவே. சாகரிக அங்கு பலரால் பின்தொடரப்படும் ஒரு எழுத்தாளர். இரகசியமே இல்லாத வாழ்வில் சுவாரசியம் இருக்காது என்று கோவிந்தசாமி வாதிட்ட போதிலும் சாகரிகா அதனைக் கண்டுகொள்ளவில்லை.
இதற்கிடையில் உயிரின் விந்தை உணர்வின் மூலம் செலுத்தும் சூனியர்களின் வழக்கமெல்லாம் அப்பப்பா.. கடவுள்கள் கூட இம்முறையைத் தான் பயன்படுத்துவார்களாம்..
நிகரற்ற சுதந்திரத்துடன் வாழப் பழகிவிட்ட எவரும் பிறர் கட்டுப்பாட்டிற்குள் வர முனைவதில்லை. சாகரிகாவும் அப்படியே. அப்படி ஒரு சூழல் வாய்க்கப்பெற்றால் முக்கால்வாசி மனித குலமும் அப்படியே.
இறுதியாக நீல நகரத்து மொழியைத் தெரிந்து கொள்ள சென்ற சூனியனும் நீல நகரத்து பிரஜையாகிவிட்டான். இவையனைத்துக்கும் சில மணி நேரங்களே ஆனது.
இப்போது நீல நகர பிரஜையாகிவிட்ட சூனியன் கோவிந்தசாமியைப் பற்றி சாகரிகா என்ன எழுதியிருக்கிறாள் என்பதைத் தேடிப் படித்தான் – அது அவள் மதியவுணவுக் குறிப்பு … it’s DIVINE 😅
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி