கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 6)

இங்கே நீல நகரத்தின் அமைப்பை ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு நடுவில் மூன்றே சாலைகளால் இணைக்கப்பட்டுருக்கும் நகரம். அனைத்து வீடுகளும் ஒன்றுபோல் அமைக்கப்பட்டிருந்தன. நிச்சயமாக அது பூமியோ அதன் பகுதியோ இல்லை.
ஆனால் சூனிய உலகத்திலோ வீடுகள் வித்தியாசமானது. யாளிகள் டிராகன்கள் எலும்புகளால் சுவரை அலங்கரிக்க வேண்டுமானால் எவ்வளவு பெரிதாக வீட்டைக் கட்ட வேண்டும்.. ஆனால் சிறை மட்டும் வேர்க்கடலை ஓட்டில்.
எரிகற்களை தோண்டி எடுத்து வீடு கட்டுவதெல்லாம் சரி, ஒளி ஆண்டு என்பது distance travelled by light தானே! Is there any relation between light year with energy? விண்கல் is asteroid, and எரிகல் is meteor, right? நிலையாக ஓர் இடத்தில் பொருத்தப்படும்/ வைக்கப்படும் (எரி)கல் எப்படி தீக்கங்குகள் உமிழும் (முதலில் அவை எப்படி எரிகற்கள் ஆகும்).
நீல நகர வாசிகளின் தோற்றமே வித்தியாசமாக உள்ளது. அங்கு அனைவரும் சமம். பூமியில் பழக்கத்தில் இருக்கும் ஆண் பெண் சிகை அலங்காரங்கள் அங்கு உல்ட்டாவாக இருந்தது, பிறப்புறுப்பு பகுதியும் தான்.
அந்நீல நகரின் எழிலையும் நகர வாசிகளையும் கண்டு ஆச்சரியப்பட்ட கோவிந்தசாமியின் நிழலுக்கு பெருத்த ஆச்சரியம் என்னவென்றால் சாகரிகாவும் நீலநகரவாசியாக மாறியிருந்தாள்…
Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!