கடந்த ஜனவரியில் என்னுடைய 15 புத்தகங்களின் புதிய மறு பதிப்பு ஜீரோ டிகிரி பப்ளிஷிங் மூலமாக வெளிவந்தது. அதன் பிறகு ஆளாளுக்கு கோவிட் வந்து ஆளுக்கொரு மாதம் அஞ்ஞாத வாசம் சென்றுவிட்டபடியால் வேலை சிறிது சுணக்கம் கண்டது. என்ன ஆனாலும் பூமி சுழலாதிருப்பதில்லை.
இதோ மீண்டும் ஆரம்பித்துவிட்டோம். இன்னொரு பதினைந்து புத்தகங்களின் புதிய மறு பதிப்புக்கான அறிவிப்பும் முன் பதிவுச் சலுகை விலைகளும் வெளியாகியிருக்கின்றன. நீண்ட காலமாக வாசகர்கள் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்த மாயவலை, ருசியியல், எக்ஸலண்ட் மறுபதிப்புகள் இப்போது வருகின்றன. இந்த உரலைப் பின் தொடர்ந்து சென்றால் என்னுடைய அனைத்துப் புத்தகங்களையும் முன்பதிவுத் தள்ளுபடி விலைச் சலுகையுடன் (20%) வாங்கலாம்.
இவ்வாண்டு இறுதிக்குள் இன்னொரு முப்பது என்பது லட்சியம். பார்ப்போம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
நல்லவர் லட்சியம் ெவல்வது …….+iYya நான் பே.பு.ல். இல்லை.. LOG OUT செய்துவிட்டேன்..writer para.
ஆன்லைன் சிறுகதைகளை தொடர்ந்து படித்து வருகிறேன்., நன்றி