இந்த அத்தியாயத்தில் பாரா அவர்கள் கடந்தகால அரசியலை தொடர்பு படுத்தி எழுதியுள்ளார். பாரா எந்தளவுக்கு வரலாறும், தத்துவமும் நேர்த்தியாக பேசுகிறாரோ, அதே அளவுக்கு அவருக்கு பகடித்தன்மையும் கைக்கூடிவரும். இந்த அத்தியாயத்திலும் அவர் மேற்கொண்டிருக்கும் சில நையாண்டித்தனம் அலாதியானவை.
//என்ன பெரிய உண்மை, என்ன பெரிய யதார்த்தம்! உண்மைகளுக்கு நிறம் இருப்பதில்லை. ருசி இருப்பதில்லை. உண்மையுடன் கூடிய ஒரு வாழ்வில் சிலாகிக்க பெரும்பாலும் ஒன்றும் தேறுவதில்லை.//
பாரா பொய் பற்றிய இந்த பத்தியை இன்னும் சில வரிகளுடன் அழகாக வர்ணித்திருந்தார். அந்த வரிகள் எனக்கு பிடித்திருந்தது. இது எவ்வளவு உண்மை. ஆனாலும் நாம் பெரும்பாலும் பொய்களை விரும்புவதில்லை தானே. இருப்பினும் சில கணத்தில் நாம் பொய்யை ரசிக்கிறோம் தானே. சில கதைக்கட்டுகளில் வல்லமையானவர்கள். பொய்கள் ததும்ப உண்மையை போலவே அவர்கள் விவரிக்கும் அந்த பொய்கள் ரசிப்பானவை. நம் உலகில் பொய்கள் நம்மை பாதிக்காதவரை அழகானவை தான். ஆனால் சூனியர்கள் பொய்களை தான் அதிகம் விரும்பிகிறதாய் பாரா எழுதியுள்ளார்.
பெரும்பாலும் சூனியர்கள் பரிதாபம் கொள்வதில்லையாம். இந்த இடம் வியப்பாக இருந்தது. நம் மனிதர்கள் பல நேரங்களில் பரிதாபத்தில் கண்ணீர் துடைத்தே காலத்தை கடத்துகிறோம்.
பெரும் மாய உலகில் எதார்த்தமும் ஓங்க பயணிக்கும் கபடவேடதாரியை மேலும் தெரிந்துக்கொள்ள ஆவலாக இருக்கிறது.