எழுத்தாளர்கள்

இ.பாவின் வலைப்பதிவு

‘….வாருங்கள். சாப்பிடப் போவோம்’ என்று சொல்லிக்கொண்டே முன் சென்றார் முதல் அமைச்சர் என்.டி.ஆர்.

“இதுதான் காலம்சென்ற என் மனைவி. இவளை வணங்கிவிட்டுத்தான் என் காலைப் பணிகளைத் தொடங்குவேன்”என்று சொல்லிக் கொண்டே அவ்வண்ணப் படத்தெதிரே மெய்ம்மறந்து சில விநாடிகள் நின்றார் அவர்.

‘A pity!!. எனக்குப் பார்வை இல்லை’ என்றார் ஹக்ஸர்.

‘அகக்கண்ணால் பாருங்கள், தெரியும்’ என்றார் என்.டி.ஆர் உரக்க சிரித்துக் கொண்டே.

ஹக்ஸர் ஒன்றும் சொல்லவில்லை.

சிற்றுண்டி சாப்பிட உட்கார்ந்தோம். அப்பொழுது அங்கு வந்த ஒருவரை முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்: ‘ இவர்தாம் டாக்டர் நாரயணராவ்காரு. தெலுகு யுனிவெஸிட்டி துணை வேந்தர். கவிஞர். இவர் என் படம் ‘குலேபகாவலிக்கு’ப் பாட்டு எழுதினார். ஒவ்வொரு பாட்டும் ‘ஹிட்’.  இதற்காகவே இவரைத் துணை வேந்தராக ஆக்கி விட்டேன்.’

ஹக்ஸருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. பேசாமலிருந்தார்.

திடீரென்று என் பக்கம் திரும்பித் தமிழில் கேட்டார் என்.டி.ஆர். ‘ நீங்கள் தமிழ்நாடா?’

‘ஆமாம்’

‘எம்.ஜிஆர் ‘குலேபகாவலி’ பார்த்திருக்கிறீர்களா?’

‘இல்லை.’

‘Great soul!’ என்று சொல்லிவிட்டு சில வினாடிகள் நினைவுகளில் ஆழ்ந்தார். அவர் எம்.ஜி.ஆரைக் குறிப்பிட்டாரா, என்னைக் குறிப்பிட்டாரா என்று எனக்கு விளங்கவில்லை….

O

மேலே நீங்கள் வாசித்தது என் மதிப்புக்குரிய எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுத ஆரம்பித்திருக்கும் வலைப்பதிவிலிருந்து சில வரிகள். இந்த வயதில் இத்தனைக் குறும்பும் கும்மாளமும் மனுஷனுக்குப் பொங்குமா? இபாவுக்குப் பொங்கும். ஆரம்பித்த ஓரிரு தினங்களுக்குள் நான்கு கட்டுரைகள் எழுதிவிட்டார். ஆர்.எஸ்.எஸ். அல்லது பஜ்ரங் தள் அல்லது ஜனதா தள்  ஃபீட் பிடித்துவைத்து ரெகுலராகப் படியுங்கள்.

இபாவின் உரைநடையைக் கூர்ந்து கவனிப்பது நமது உரைநடையைக் கூர்மைப்படுத்திக்கொள்ள மிகவும் உதவும்.

இபாவின் வலைத்தளத்துக்குச் செல்ல இங்கே வருடவும்.

Share

2 Comments

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி