அனுபவம்

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 4)

விடுதலையின் பெருமூச்சு தன்னம்பிக்கையுடன் தானே வெளியேறும். சூனியனின் மனநிலையும், கொண்டாட்டமும் நம்மையும் தொற்றி கொள்கிறது. மேலும், கதையில் இப்போது கோவிந்தசாமி என்னும் புது கதாப்பாத்திரம் அறிமுகமாகிறது. விந்தை என்னவென்றால், ஒரே அத்தியாயத்தில் ஒருவரை இவ்வளவு தெரிந்து கொள்ள முடியும் என்று காட்டி விட்டார் நம் பாரா. நகைச்சுவை கலந்த இந்த அறிமுகம், கோவிந்தசாமி மீது ஒரு வித காழ்ப்புணர்வும், ஒரு வித பரிதாபமும் கலந்த ஒரு வித்தியாசமான உணர்வை தருகிறது.
சூனியன் , கோவிந்தசாமி மூளைக்குள் குதித்து, அவனின் மன வரைபடத்தை படித்ததில், எனக்கு சாகரிகாவை ஏனோ பிடித்து போனது. சுத்தமாய் எதிர்மறையான இருவர் காதல் கொள்வது என்ன டிசைன் என்றே புரியவில்லை. காதல் புரியாதது என்று சொல்வார்கள். அதனால் நான் அந்த பக்கம் போக போவதில்லை. கதைக்கு வருவோம்.
என்ன தான் சூனியனாய் இருந்தாலும் அவனுக்கு ஏன் பரிதாபம், உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் போன்ற “தேவ” உணர்வுகளெல்லாம் வருகிறது என சிறிது குழப்பமாய் உள்ளது. ஏதாவது பெரிய காரணம் இருக்கும் என எதிர்ப்பார்க்கிறேன்.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி