போஸ்டர்

சக்தி ஜோதி என்ற சகோதரி நேற்று இந்தப் படத்தை அனுப்பியிருந்தார். நிலக்கோட்டையில் இருந்து ஐயம்பாளையம் வரை இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதாகச் சொன்னார். மதுரையில் வசிக்கும் மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர், நண்பர் மதுசூதனன் நிலக்கோட்டையிலேயே வசிக்கும் அவரது நண்பரைத் தொடர்புகொண்டு மேலும் சில படங்களும் ஒரு விடியோவும் எடுத்து அனுப்பியிருந்தார்.

எழுதுபவனைத் தவிர வேறு யாருக்கும் இந்த முகமறியா அன்பெல்லாம் சாத்தியமேயில்லை.

கடந்த ஐந்து மாதங்களாகச் சரியான தூக்கமில்லாமல், கண் எரிச்சல், கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி என்று இலக்கணப்படி மிகக் கூடாத இடங்களிலெல்லாம் வலி மிகுந்து வெறி பிடித்தாற்போல மணிப்பூர் புத்தகத்தை எழுதி முடித்தேன். இன்று இந்த போஸ்டர் அனைத்து வலிகளையும் வாரிக்கொண்டு போய்விட்டது.

Share