இப்படியெல்லாம் கூட ஒரு நகரம் இருக்க இயலுமா????
பொதுவாக, பறக்கும் தட்டு, வேற்றுலகவாசிகள் போன்ற பிரச்சனைகள் எழும்போதெல்லாம் அப்படியெல்லாம் இருக்காது என்று கருதினாலும், இந்த பேரண்ட வெளியில் இன்னும் நாம் அறியாத எவ்வளவோ இருக்கலாம், மனித இனம் இன்னும் அறிந்து தேற வேண்டியது எவ்வளவோ இருக்கும் போது ஏன் அப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்ற வினாவும் சேர்ந்தே எழுமல்லவா? அப்படித்தான் இப்படியும் ஒரு கிரகமிருக்க வாய்ப்பிருக்கலாம் என்ற எண்ணத்தில் தான் இத்தொடரை தொடர வேண்டியிருக்கிறது.
அதிலும் அம்மனிதர்களின் இல்லை…. இல்லை… மனிதர்களைப் போன்றவர்களின் தலையின் பின்புறம் ஒரு கண், கைகளிலும், நெற்றியிலும் ஆண், பெண் குறிகள் என்பதெல்லாம் ஒரு அறிவியல் புனைவு நாவலுக்கே உரித்தான கற்பனைகள்.
அவர்களில் ஒருத்தியேப் போன்றே இருக்கும் சாகரிகாவைக் கண்டதும் கோவிந்தசாமியின் நிழலைப் போன்றே நாமும் அதிர்ச்சியாகிறோம்.
சரி… இருங்கள்.. அடுத்து என்னவாகுதுனு பார்த்துட்டு (படிச்சிட்டு) வரேன்…..