கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 5)

‘ஓடிப் போனவளைத் தேடிப் போகாதே’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. கோவிந்த சாமிக்கு இந்தப் பழமொழி தெரியாது என்று நினைக்கிறேன்.
சிதறுதேங்காயைப் போல ஒருவருக்குத் தன் வாழ்க்கை சிதறடிக்கப்படும்போது அவன் நினைவுகள் திசைக்கு ஒன்றாகச் சென்று விழுவது இயற்கையே. அவற்றை அவன் பொறுக்கியெடுத்து, தொகுத்துக்கொள்வதற்குள் இன்னும் கொஞ்சம் வாழ்க்கையை இழந்துவிடுவான்.
கோவிந்த சாமியின் வாழ்க்கையை ஊழ் சிதறுதேங்காயாக்கிவிட்டது. சிதறிய துண்டுகளின் வழியாக கோவிந்தசாமியின் மனம் மல்லாந்து வானம் பார்க்கிறது.
இந்த நாவலில் ஒருவனின் நிழலை மட்டும் அழைத்துச் செல்வதாகக் காட்டியிருப்பது புதுமை. நிஜங்களைவிட நிழல்களே நேர்மையானவை!
‘ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் ராஜா; அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. சூனியனின் கையில் அகப்பட்ட கோவிந்த சாமியின் நிழலுக்கு ஜாதகப்படி எந்த கிரகம் எந்த இடத்தில் இருக்கிறது, என்னென்ன பலன்களைத் தரப்போகிறது என்பதை எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்கள்தான் கணித்துக் கூற வேண்டும்.
Share

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds