கைதி தப்பிப்பது என்பது ஓர் அகவிடுதலைக்கு நிகரானது. அதைச் ‘சூனியன்’ அடைந்துவிட்டான். அவன் அடையும் புதிய இடம் புதிராகவே இருக்கிறது.
ஒருவரைப் பற்றி ரகசியமாக அறிய வேண்டுமெனில் அவருடைய நாட்குறிப்பைப் படிக்கலாம்; அவரை மறைமுகமாகப் பின்தொடரலாம்; அவருக்கு நெருக்கமாகவராக நடிக்கலாம். ஆனால், ஒருவரின் மண்டையைத் திறந்து புத்தகத்தைப் படிப்பது போலப் படித்து அறிவது என்பது அற்புதமான கற்பனை.
எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்கள் கோவிந்சாமி என்ற நாற்பது வயது இளையமுதியவரைப் பற்றி ஒரே அத்யாயத்தில் புலிப்பாய்ச்சல் நடையில் சொல்லியிருப்பது வியப்பைத் தருகிறது. பக்தி, ஆன்மிகம், புறக்கணிப்பு, தனித்தலைதல், கொள்கை, புதிய நட்பு, காதல், கல்யாணம் என அனைத்தும் குழப்பியடித்து தலைசுற்றி நிற்கிறார் கோவிந்சாமி.
ஐந்து வரிகளுக்கு ஒரு திருப்பமென இந்த நாவல் தன் இதழ்களை ஒரு மலர்போல மலர்த்தி மலர்த்தி மணக்கிறது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.