எதார்த்தக் களத்தில் இருந்து மீண்டும் ஒரு வினோத உலகத்துக்கு கதை செல்கின்றது. நீல நகரத்துக்கும் சூனிய கிரகத்துக்கும் தான் எவ்வளவு வசீகரமான வேறுபாடுகள்.
நீல நகரம் என்பதை அறிந்து அல்லது புரிந்து கொண்டது ஒரு Spoiler என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு புதிர் விளையாட்டின் முடிச்சுகளைப் போல ஒவ்வொரு அத்தியாயமும் படிப்படியாக அதை நோக்கி வாசகனை அழைத்துச் செல்வது அத்தனை சுவாரசியமாக இருக்கிறது.
மனிதர்களைப் போன்ற இருக்கும் மனிதர்களை கொண்ட நீல நகர வாசிகளுக்கு பிறப்புறுப்பும் கண்ணும் மட்டும் வேறுபட்டு அமைந்து இருப்பதற்கான காரணத்தை நோக்கித்தான் கதை இனி நகரும் என்று நினைக்கின்றேன். ஒருவேளை அதுதான் கதையின் பிரதான கருப்பொருளாகக் கூட இருக்கக்கூடும்.
மனிதர்களாக நீல நகரத்துக்குள் வரும் ஒவ்வொருவரும் ஏன் மனிதர்களை போன்றவர்களாக மாறி விடுகிறார்கள்? இடப்பெயர்ச்சி சூனியனுக்கா அல்லது மனிதனுக்கா என்பவை தான் இந்த அத்தியாயத்தின் இறுதியில் எஞ்சி நிற்கும் கேள்விகள்.