கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 11)

உண்மைக்குப் புறம்பான செய்திகளை வலம் வரச் செய்வதும் விஷமிகளின் வேலையாகும். சமூக ஊடகங்களில் தற்பொழுதெல்லாம் இதுதான் நடக்கிறது. அதனால்தான் உண்மைக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இவைபோன்ற அவதூறுகளை வாசிக்கும் பலர் என்ன, எதுவென்று ஆராயாமல் இவற்றை உண்மை என எண்ணி அவற்றின் பின் செல்கின்றனர். அதுபோல் அவனது உறுப்பைப் பற்றி வெண்பலகையில் வெளியிடுவது பழிவாங்குதலின் உச்சம். அதன் பின் வெண்பலகையில் சூனியனும் நிழலும் வெளியிட்ட செய்தி அவளின் வினைக்கு எதிர்வினையாகும். செய்கையால்விட வார்த்தையில் பழிவாங்குதல் வழி ஆத்ம திருப்தியை அடைய முடியும் போல. இருவரும் அதைச் செய்து தன் மனக்கழிவுகளை வெளியேற்றுகின்றனர்.
சூனியனின் எண்ணியது வேறு. நடந்தது வேறு. அரசியின் வருகையால் தான் என்னென்ன செய்யலாம் என்று கணக்கிட்டு வைத்திருந்தது. அந்தக் கணக்கானது புஷ்கரணிக்கு வந்தவர்களாலும் அரசியாலும் பாதுகாப்புப் பணியாலும் அதிகாரிகளாலும் மாறியது. அதைவிட பொய்க்கணக்குதான் சூனியன் மரணதண்டனைக்கு வித்திட்டது.
சூனியன் நம்பிக்கை ஊட்டும் வித்தைக்காரனாகவும் இருக்கிறான். மனத்திடம் நம்மை வலுவான அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதை மரணதண்டனையிலிருந்து அவன் தப்பித்த விதத்தைக் கண்டு அறிகிறோம்.
அன்பிற்குப் பணியாதவர்கள் எவரும் இல்லை. யாரோ ஒருவரிடமோ அல்லது தன் எண்ணம் போல் செயல்படுவர்களிடத்து தன் அன்பினைக் கொடுத்து விடுகின்றனர். அன்புக்கு இனிய மனைவியிடம் அரசி வரப்போகும் உண்மையை அதிகாரி கூறி விடுகிறார். அவள் மூலம் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. ‘பெண்ணிடம் இரகசியம் தங்காது’ என்ற கருத்து ஆண்களுக்கு மத்தியில் நிலவுகிறது. அது எந்த அளவு உண்மை என்பதை ஆண்கள் மட்டுமே அறிவர். மனைவி என்றாலும் உண்மையைக் கூறாமல் காப்பதுதானே அவனின் பணி. அந்தப் பணியிலிருந்து அவனைத் தவற வைத்து, தன் மரணதண்டனைக்குத் தானே வழிவகுத்துக்கொண்டான் சூனியன்.
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி