அந்த நகரத்து மனிதர்களின் மாற்றங்களையெல்லாம் அவ்வளவு பெரியதாக எடுத்துக் கொள்ளாத கோவிந்தசாமி அதே மாற்றத்திற்கு தன் மனைவியும் ஆளாகி இருப்பதைப் பார்த்து பதறுகிறான்.
அவள் அவனை நிராகரித்துப் பேசும்போது அவனது பதற்றம் இன்னும் அதிகரிக்கிறது.
இந்த மாதிரி ஒரு அதிர்ச்சியை யாராலும் ஏற்கமுடியாதுதான். அதுவும் தன் மனைவியை இப்படியொரு நிலையில் பார்ப்பதற்கும் அவளின் நிராகரிப்பை ஏற்பதற்கும் எந்தவொரு கணவனாலும் முடியாதுதான்.
ஆனால் இங்கே அது தேவையில்லை. ஏனென்றால் அது கோவிந்தசாமியே இல்லை. அவனது நிழல். அது எதற்கு அதைப்பற்றியெல்லாம் நினைத்து பதறவேண்டுமென சூனியன் கேட்கி றான். நியாயம்தானே?
அதுவுமன்றி அங்கே பதற்றப்படுவதால் சாதிக்கப் போவதென்ன? ஒன்றுமில்லை. எனவே அடுத்து சில செயல்களை செய்கிறான் அவன்.
இன்னொரு ஆச்சர்யமான விஷயம் அந்நகரத்தின் தகவல் தொடர்பு. அங்கே ரகசியம் என்று எதுவுமில்லை. எல்லாரும் எல்லாவற்றையும் தங்களது மொழியில் ஊருக்கு தெரிவித்து விடுகிறார்கள். அவளும் அதைச் செய்கிறாள்.
அவள் அவன் வரவை அந்நகருக்கு தெரிவித்ததோடு அல்லாமல் அவள் தயாரித்து உண்ட ஒரு உணவைப் பற்றி பகிர்கிறாள்.
கோவிந்தசாமி நிச்சயம் சுத்த சைவமாகத் தான் இருப்பான். அந்த உணவைப் பற்றி கேட்டதும் அவனது நிழல் எப்படி கொதிக்கப்போகிறது? சூன்யன் அடுத்தடுத்து என்னென்ன செய்யப் போகிறான்? அடுத்தடுத்து என்னென்ன ஆச்சர்யங்கள் அந்நகரத்தில் நிகழப்போகிறது? என்பதெல்லாம் பிறகுதான் தெரியும்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.