கபடவேடதாரி – இந்துமதி என். சதீஷ் மதிப்புரை (அத்தியாயம் 3)

வாய்ப்பு கிடைக்குமென காத்திருக்காமல் தனக்கான வாய்ப்புகளை உருவாக்குவதுடன், கிடைத்த வாய்ப்புகளை விடாமல் பயன்படுத்திக் கொள்பவர்களே புத்திசாலிகள்.
இங்கு புத்திசாலியான சூனியன் கிடைத்த வாய்ப்பை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு, மரணதண்டனையிலிருந்து தப்பிக்க நினைக்கிறான்.
நியாயாதிபதிகளை வாக்கு சாதுரியத்தால், தன் கருத்துக்கு இணங்க வைத்து, பூகம்பச்சங்கை தன்னோடு இணைத்துக் கட்டச்செய்து, மிதக்கும் நீல நகரத்தை தாக்கி அழிக்க தயாராகிறான்.
மரணத்தின் பீதியில் இருக்கும்பொழுதிலும் தன்னுடைய கருத்துக்களை அஞ்சாமல் எடுத்துரைக்கும் அவனுடைய தைரியம் இரசிக்கத்தக்கதாக இருக்கிறது.
சில வினாடிகளில் மரணம் சம்பவிப்பது உறுதி என்று அறிந்த பிறகும் தப்பித்துவிடும் உத்வேகத்துடன் செயல்படும் விவேகமும்,அவனின் சிந்தனைகளும் வியக்கவைக்கிறது.
மிகுபுனைவுகள் மிகுதியான இந்த அத்தியாயம் ஒரு மாயாஜால திரில்லர் திரைப்படம் பார்ப்பது போன்றதொரு உணர்வை ஏற்படுத்துகிறது.
மரணத்தில் இருந்து தப்பித்து உயிருடன் நீல நகரத்திற்குள் நுழைகிறான் சூனியன்.
Share