சூனியனின் திட்டத்திற்கேற்ப, செம்மொழிப்பிரியா நிழலையும், அதுல்யா கோவிந்தசாமியையும் காதல் வசப்படுத்துவதென முடிவாகிறது. இதற்கிடையில், இரவு ராணி என்னும் மந்திர மலரைத் தேடி கோவிந்தசாமி நீல வனத்திற்கு வந்துவிட்டான்.
அந்த மந்திர மலரைக் கொண்டு சாகரிகாவை தன்வசமாக்க பார்க்கிறான் கோவிந்தசாமி. செம்மொழிப்பிரியாவும் நிழலைப் பார்க்கப் புறப்படுகிறாள்.செம்மொழிக்கு நிழலைக் கண்டுபிடிக்கச் சற்று கடினமாகத்தான் இருந்தது. பல்வேறு சமஸ்தானங்களை தாண்டி நிழலைத் தேடி செல்கிறாள்.
ஒரு சமஸ்தான நீல வனவாசிகள், சாப்பாட்டை பற்றி மட்டுமே பேசுகின்றனர். இது செம்மொழிக்கு பெரிதாகப் பிடிக்கவில்லை. வேறொரு சமஸ்தானத்தில் பொருளீட்டும் வழிமுறைகளைப் பற்றிப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தனர். மேலும் சலனப்பட சமஸ்தானம், சிறுதிரை சமஸ்தானம், எண் கணித சமஸ்தானம், ஆருட சமஸ்தானம், ஆருட சமஸ்தானம், பேய் பிசாசுகளின் சமஸ்தானம் என வியப்பில் ஆழ்ந்தபடியே கடந்து சென்றாள்.
கூடவே பேய்களைப் பற்றியும் தெரிந்து கொள்கிறாள். நிழலைக் கண்டு கொண்டு அவனைக் காதல் வலையில் வீழ்த்துகிறாள் செம்மொழிப்பிரியா.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.