கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 8)

பாரா அவர்கள் அழுத்தமான நல்ல அரசியல் பேசியிருக்கிறார் இந்த அத்தியாயத்தில். சங்களின் பல அம்சங்களையும் கோவிந்தசாமியின் கதாப்பாத்திரத்தில் நேர்த்தியாக அமர வைத்திருப்பது தெள்ளத்தெளிவாக இந்த அத்தியாயத்தில் வெட்ட வெளிச்சம் ஆகிறது. இந்திய தலைநகரிலிருந்து புறப்பட்டு வந்து மாநாட்டில் பேசிய அந்த தலைவரின் ஹிந்தி மொழி புரியாத போதிலும், கோவிந்தசாமி உணர்ச்சிவசப்பட்ட இடம் மடத்தனமாக இருந்தது. அதுவே அவனை முழுமையாக சங்கி என உணர்த்திவிட்டது.
அத்தியாயத்தின் கடைசியில் கோவிந்தசாமியிடம் வந்து கதைத்த அந்தப்பெண்ணிற்கு மட்டும் எப்பிடி அந்த வெண்பலகை மொழி புரிந்தது. அவளும் நீலநகருக்கு புதியவள் தானே. இன்னும் நீலநகரத்தின் குடியுரிமை பெற்றிடாத சாதரண பெண் தான். ஒருவேளை இந்த விசயங்கள் எல்லாம் தன் தோழி சாகரிகாவின் மூலம் வாய்மொழியில் அறிந்து வைத்திருப்பாளோ. சாகரிகா கோவிந்தசாமியை முற்றிலும் வெறுத்துவிட்டாள் என அறியாத கோவிந்தசாமிக்கு சாகரிகா அவனைப்பற்றி எழுதும் தொடர் அதிர்ச்சியாக தான் இருக்கும். முழுமையாக அறிந்தால் கோவிந்தசாமி என்ன செய்வானோ என அடுத்துவரும் அத்தியாயத்தை எதிர்நோக்கி படிக்க சொல்கிறது.
Share
By Para

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me