‘நியாயத்தீர்ப்பின்படி நான் குற்றவாளி ஆக்கப்பட்டேன்’ என்ற வார்த்தைகளில், ஏனோ பட்டாம்பூச்சி நாவலின் வரிகளில் மனம் ஆழ்ந்து, ஆற்றிலொரு கால் சேற்றிலொரு காலாக பயணிக்கத் தொடங்கியது, கதையுடனான என் உள்மனச் சாத்தான்.
ஒவ்வொரு மாட்டிக்கொள்ளும் பிரச்சினையிலும் என் மனம் பயணிக்கும் விதம்தான் அந்த விசாரணை போகும் விதமும். யூதாஸை என் மானசீக மனமாக அல்லது என் மூதாதையாக கற்பனை செய்தால், கதையை காமிக்ஸாக உருவகப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்க ஏதுவாக இருக்கிறது.
பதின் பருவ காமிக்ஸ் அனுபவத்தை மீண்டும் கற்பனை யில் பெற அடுத்தடுத்த அத்தியாயங்கள் ஒருவேளை உதவக்கூடும்.