பூமியில் இருந்து மாறுபட்டு இருக்கும் நீல நகரம் மற்றும் சூனியர்களின் உலகம் இரண்டையும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி வருணித்திருப்பது படிப்பவரை பிரமிக்க வைக்கிறது .
சூனியர்களின் உலகில் இருக்கும் வீடுகளின் கட்டமைப்பை எடுத்துச் சொல்லியிருக்கும் விதத்தில் ஆசிரியரின் கற்பனை திறன் ஆச்சரியப்படுத்துகிறது. படிக்கும் பொழுது சிறு குழந்தையாய் நம்மை வாய் பிளக்கச்செய்கிறது.
நீல நகரத்தில் இருந்தவர்கள் மனிதர்களாக இல்லாமல் மனிதர்களைப் போல் இருப்பது ஏலியன்ஸை நினைவூட்டுகிறது. மனிதர்களாக நகரத்திற்கு வந்தவர்கள் அங்கு சென்றதும் வேறு குலத்தவர்களாக மாறி விடுகிறார்கள் என்பது வியக்க வைக்கிறது .ஆனால் அதே சமயத்தில் நீல நகரவாசிகளின் உருவமைப்பு படிப்பவரை அருவருப்பில் முகம் சுளிக்க வைக்கிறது.
கோவிந்தசாமியின் நிழலும் சூனியனும் சாகரிகாவை தேடிச்செல்லும் பொழுதில், கோவிந்தசாமியின் முட்டாள்தனத்தையும், எதையும் சரியாக புரிந்து கொள்ள முடியாத அவன் பிரச்சினையையும் தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது. மற்றவர்களுக்கு பிரச்சினையாக இருக்கும் எதுவும் கோவிந்தசாமிக்கு பிரச்சினையாக இருப்பதில்லை. சூனியனும் கோவிந்தசாமி நிழலும் சாகரிகாவை கண்டுபிடிப்பதுடன் அத்தியாயம் நிறைவடைகிறது.
சூனிய உலகின் வர்ணனைகள்படித்து முடித்த பிறகும் மனதில் நிழலாடிக் கொண்டே இருக்கிறது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.