அவள் ஏற்கனவே அந்த வீடியோவைப்பார்த்து கடுகடுப்பாய் இருக்கும்போது அவன் அங்கே வந்தால் அவளுக்கு எப்படி இருக்கும்? அதுவும் அவளின் எதிரணியில் இருக்கும் நரகேசரியுடன் வந்தால்?
அவள் அங்கிருக்கும் ஒரு கரடியின் முகத்தைக் கொண்டு தன் இருப்பை மறைத்து அங்கிருந்து வெளியேறுகிறாள்.
அந்த வீடியோவைப் பார்த்து அவன் கதறுகிறான். அதுவும் அந்த வீடியோவை அவள் பார்த்துவிட்டாள் என அறிந்ததும் இன்னும் பதற்றம் கூடுகிறது. நூலகருக்கும் கோவிந்தசாமிக்கும் முன்னால் கரடியாய் மாறி அவள் வெளியேறும் காட்சி சிறப்பு.
நரகேசரிக்கும் அவனுக்கும் இந்த நிகழ்வு சம்மந்தமாக வாக்குவாதம் நடக்கிறது. அத்தியாயத்தின் இறுதியில் அவள் தப்பிப்பதற்கு உதவிய கரடியே வந்து அவளைக் காட்டிக்கொடுக்க முனைகிறது.
அடுத்தடுத்த அத்தியாயங்கள் இன்னும் கூடுதல் சுவாரஸ்யங்களுடன் இருக்கக்கூடும் ஏனென்றால் அனைத்து கதாபாத்திரங்களும் நீலவனத்தில் வந்து சேர்ந்தாயிற்று.
சாதரிகாவுக்கும் ஷில்பாவுக்கும் இடையில் உள்ள நட்பு முறியலாம். சாகரிகா தனித்து விடப்பட்டாலும் வனவாசிகள் அவளை கைவிடமாட்டார்கள் போலிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.