அனுபவம்

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 34)

இந்த அத்தியாயம், கோவிந்தசாமி நிழலையும் செம்மொழிப்ரியாவையும் சுற்றியே நகர்கிறது. செம்மொழிப்ரியா காதல் வசனங்களைப் பேசிக் கோவிந்தசாமி நிழலை மயக்குகிறாள். நிழலும் அவளது காதல் வசனங்களுக்கு மயங்கிச் சாகரிகாவை பற்றியும் அவளது திட்டங்களைப் பற்றியும் உளறிக் கொட்டுகிறது. செம்மொழிப்ரியா நாசுக்காகப் பேசி, “இவ்வளவு நாள் கோவிந்தசாமிக்கு அடிமையாக இருந்தாய், இப்போது சாகரிகாவுக்கு அடிமையாக இருக்கிறாய், ஒரு சுதந்திரமான பிரஜையைத் தான் தன்னால் காதலிக்க முடியும்” என அழுத்தம் திருத்தமாகக் கூறி விட்டு நகர்கிறாள்.
போகும்போது நீல வனத்தின் மந்திர மலரை முகர்ந்து பார்த்து விட்டு அதை நிழலின் மேல் தூக்கி எறிந்து விட்டுச் செல்கிறாள். ஏற்கனவே அவள் பேசியதில் குழம்பிப் போயிருந்த நிழல், மந்திர மலரை முகர்ந்து பார்த்தபின் செம்மொழிப்ரியாவின் காதலுக்கு கட்டுண்டு, சமஸ்தானத்தின் அதிபதியாக ஆனபின் அதன் நிர்வாக அலுவலர் காதலியென முடிவு செய்கிறது.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி