சாகரிகாவும் ஷில்பாவும் நீலவனத்தின் நூலக சமஸ்தானத்தை அடைந்தபோது, அதன் வாசலில் யாளி ஒன்று விழுந்து கிடந்தது பற்றியும் அதைப்பற்றிய சுவாரஸ்யமான விவரங்களுடன் அத்தியாயம் தொடங்குகிறது.
அதுவரை யாளியைப் பற்றி பேசிக்கொண்டிருந்த நீலவனத்தினர் சாகரிகாவின் வருகையை அறிந்ததும் அவள் மீது தங்களது கவனத்தை திசைதிருப்புகின்றனர்.
அங்கே வெண் பலகையில் கோவிந்தசாமியின் சான்ட்விச் மசாஜ் சல்லாபக்காட்சிகள் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தன. சாகரிகாவும் அதைப் பார்க்க நேரிடுகிறது. அந்த நேரத்தில் நரகேசரியுடன் கோவிந்தசாமி அங்கே நுழைகிறான்.
என்னதான் அவனிடமிருந்து பிரிந்திருந்தாலும் அவன் இப்படியெல்லாம் நடந்துகொள்வதை அவள் ஏற்பாளா? அதுவும் வெண்பலகையில் வெளியாகி அனைவருக்கும் தெரியும் அளவுக்கா இப்படியெல்லாம் நடந்துகொள்வான் என அவள் நினைக்கலாம்.
அந்த நரகேசரியுடன் அவனுக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது. அதுவும் இவ்வளவு சீக்கிரத்தில் என்பதும் கேள்வியாகவே இருக்கிறது. விடை அடுத்த அத்தியாயத்தில் கிடைக்கலாம்.
பா.சுதாகர்
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.